28.2 C
Jaffna
Tuesday, September 8, 2020
Home News கரும் புகை சூழ்ந்ததால் மக்களுக்கு அபாய எச்சரிக்கை!

கரும் புகை சூழ்ந்ததால் மக்களுக்கு அபாய எச்சரிக்கை!

மேற்கு இந்தோனேஷியாவில் உள்ள சினாபுங் என்ற எரிமலை மிகவும் சீற்றத்துடன் காணப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து,எரிமலையை அண்மித்த பகுதியில் உள்ள கிராமவாசிகளை அங்கிருந்து வெளியேறுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்தோனேசியாவின் முக்கிய தீவுகளில் ஒன்றான சுமத்ராவில் உள்ள சினாபுங் என்ற எரிமலை இன்று காலை முதல் மிகவும் சீற்றத்துடன் காணப்படுவதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இன்று காலை சுமார் 3,280 அடிக்கும் அதிகமான புகை மற்றும் சாம்பலை இந்த எரிமலை வெளியேற்றியுள்ளது,

மேலும் சூடான சாம்பல் மேகங்கள் தென்கிழக்கில் ஒரு கிலோமீட்டர் தொலைவு பயணித்ததாகவும் இந்தோனேசியாவின் எரிமலை மற்றும் புவியியல் தீங்கு குறைப்பு நிலையம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து,எரிமலையின் வாயிலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் இடம்பெயருமாறு கிராமவாசிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேலும் எரிமலையின் ஆபத்து குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்று குறித்த நிலையம் தெரிவித்துள்ளது.

பெரும் சீற்றத்துடன் வெடித்து சிதறி வானத்தை சூழ்ந்த கரும் புகை! மக்களுக்கு விடுக்கப்பட்டது அபாய எச்சரிக்கை

இதுவரை புகை மற்றும் சாம்பலினால் விமானப் பயணம் பாதிக்கப்படவில்லை என்றும் இந்தோனேஷிய போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது,

அதேநேரம்,இந்த எரிமலைக் குமுறுல் காரணமாக இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளில் சினாபுங் எரிமலையைச் சுற்றியுள்ள வீடுகளிலிருந்து சுமார் 30,000 பேர் கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

2,600 மீட்டர் உயரம் கொண்ட சினாபுங் எரிமலை நான்கு நூற்றாண்டுகளாக அமைதியாக இருந்தது எனவும்,2010 இல் குறித்து எரிமலை வெடித்ததன் காரணமாக இரண்டு பேர் உயிரிழந்தனர்,2014 இல் ஏற்பட்ட மற்றொரு வெடிப்பில் 17 பேரும் 2016 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெடிப்பில் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

0 Reviews

Most Popular

கர்ப்பிணித் தாய்மார்கள் கொய்யா பழம் சாப்பிடலாமா…?

கொய்யா பழத்தில் போலிக் அமிலமும்,வைட்டமின் பி9 போன்ற சத்துக்கள் உள்ளது.இதனால் உங்கள் குழந்தையின் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை சரியான முறையில் செயல்படுத்த செய்கிறது. கர்ப்பிணிகளுக்கு இரும்பு சத்து என்பது அவசியம்,இந்த கொய்யா பழத்தில்...

தைராய்டு யாருக்கெல்லாம் ஏற்படலாம்?

நீங்கள் பெண்ணாக இருந்தால் தைராய்டு ஏற்படலாம். நீங்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றால் தைராய்டு சிக்கல்கள் வரலாம். கதிரியக்க அயோடின் அல்லது தைராய்டு எதிர்ப்பு மருந்துகளுடன் சிகிச்சை பெற்றிருக்கிறார்கள் என்றாலும் தைராய்டு...

பொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிந்துகொள்ள வழிகள் இதோ!

பெண்களிடம் பொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிய வழிகள் காதல் என்ற அற்புதமான ஒன்றை பலர் சீரியஸாக செய்தாலும்,சிலருக்கு இது ஒரு 'டைம் பாஸ்' போன்று உள்ளது. அப்படி காதலை டைம் பாஸாக செய்வது...

அரிசியில் பாயாசம் செய்யும் எளியமுறை!

அரிசியில் பாயாசம் செய்வது எப்படின்னு பார்க்கலாம் வாங்க..! தேவையான பொருட்கள்: நெய் – 2 டீஸ்பூன் ஏலக்காய் – 3 கிராம்பு – 3 மில்க்மேட் – 3 டீஸ்பூன் எல்லோ புட் கலர்...

Recent Comments