28.2 C
Jaffna
Tuesday, September 8, 2020
Home News டிரம்ப்பின் தடை உத்தரவை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு!

டிரம்ப்பின் தடை உத்தரவை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு!

அமெரிக்காவில் டிக்டாக் செயலிக்கு தடைவிதிப்பதற்கான உத்தரவை அதிபர் டிரம்ப் பிறப்பித்துள்ளார்.

அந்த உத்தரவை எதிர்த்து டிக்டாக் நிர்வாகம் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தென்சீன கடல் விவகாரம்,வர்த்தகப்போரில் தொடங்கிய அமெரிக்க-சீன மோதல் கொரோனா வைரஸ் விவகாரத்தில் உச்சத்தை அடைந்தது. வைரஸ் தொடர்பாக இரு நாடுகளும் ஒருவரை ஒருவர் குற்றச்சாட்டி வந்தனர்.

இந்த மோதலை மேலும் அதிகரிக்கும் வகையில் கொரோனா தடுப்பூசி தகவல்களை திருட முயற்சிப்பதாக சீனா மீது அமெரிக்கா அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தியது.

மேலும்,அமெரிக்காவின் ஹூஸ்டனில் உள்ள சீன தூதரகம் உளவு வேலையில் ஈடுபடுவதாக கூறி தூதரகத்தை உடனடியாக மூட உத்தரவிட்டது.

ஹூஸ்டன் தூதரகம் மூடப்பட்ட சில நாட்களில் பதிலடி நடவடிக்கையாக வுகான் நகரில் அமெரிக்க தூதரகத்தை சீனா மூடியது.

இதனால் இரு நாடுகௌக்கு இடையே பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது இதற்கிடையில்,இந்தியா மேற்கொண்ட நடவடிக்கை போன்றே சீனாவின் டிக்டாக் செயலியை தங்கள் நாட்டிலும் தடை விதிக்க அமெரிக்கா தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.

அமெரிக்காவில் 80 மில்லியன் பயனாளர்களை கொண்ட டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கப்படும் பட்ச்த்தில் டிக்டாக்கின் தாய்நிறுவனமான சீனாவின் பைட் டான்ஸ் நிறுவனம் பெரும் நஷ்டத்தை சந்திக்க நேரிடும்.

இதனால் டிரம்ப் தடை விதிக்கும் முன்னரே டிக்டாக் செயலியின் அமெரிக்க செயல்பாட்டு உரிமத்தை விற்பனை செய்யும் முயற்சியில் பைட் டான்ஸ் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.

இதற்காக அமெரிக்காவின் மைக்ரோசாப்ட்,டுவிட்டர்,ஒரகல் போன்ற நிறுவனங்களுடன் டிக்டாக் நிறுவனம் பேச்சுவாத்தையில் ஈடுபட்டு வருகிறது.

டிக்டாக்கின் உரிமத்தை அமெரிக்க நிறுவனம் வாங்கினால் எந்த பிரச்சனையும் இல்லை எனவும் ஒருவேளை டிக்டாக் செயலி தங்கள் நாட்டு நிறுவனத்திற்கு விற்கப்படவில்லை என்றால் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி முதல் அந்த செயலி அமெரிக்காவில் செயல்பட தடை விதிக்கப்படும் என அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்தார்.

இதனால் மைக்ரோசாப்ட்,டுவிட்டர் போன்ற நிறுவனங்களுடன் டிக்டாக் நிர்வாகம் தொடர்ந்து தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.

இதற்கிடையில்,

அதிபர் டிரம்ப் கடந்த 14 ஆம் தேதி பிறப்பித்த மற்றுமொரு உத்தரவில் டிக்டாக்கின் உரிமத்தை அமெரிக்க நிறுவனத்திடமே ஒப்படைக்க தாய் நிறுவனமான பைட் டான்ஸ் விதிக்கப்பட்ட அவகாசம் 90 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

0 Reviews

Most Popular

கர்ப்பிணித் தாய்மார்கள் கொய்யா பழம் சாப்பிடலாமா…?

கொய்யா பழத்தில் போலிக் அமிலமும்,வைட்டமின் பி9 போன்ற சத்துக்கள் உள்ளது.இதனால் உங்கள் குழந்தையின் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை சரியான முறையில் செயல்படுத்த செய்கிறது. கர்ப்பிணிகளுக்கு இரும்பு சத்து என்பது அவசியம்,இந்த கொய்யா பழத்தில்...

தைராய்டு யாருக்கெல்லாம் ஏற்படலாம்?

நீங்கள் பெண்ணாக இருந்தால் தைராய்டு ஏற்படலாம். நீங்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றால் தைராய்டு சிக்கல்கள் வரலாம். கதிரியக்க அயோடின் அல்லது தைராய்டு எதிர்ப்பு மருந்துகளுடன் சிகிச்சை பெற்றிருக்கிறார்கள் என்றாலும் தைராய்டு...

பொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிந்துகொள்ள வழிகள் இதோ!

பெண்களிடம் பொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிய வழிகள் காதல் என்ற அற்புதமான ஒன்றை பலர் சீரியஸாக செய்தாலும்,சிலருக்கு இது ஒரு 'டைம் பாஸ்' போன்று உள்ளது. அப்படி காதலை டைம் பாஸாக செய்வது...

அரிசியில் பாயாசம் செய்யும் எளியமுறை!

அரிசியில் பாயாசம் செய்வது எப்படின்னு பார்க்கலாம் வாங்க..! தேவையான பொருட்கள்: நெய் – 2 டீஸ்பூன் ஏலக்காய் – 3 கிராம்பு – 3 மில்க்மேட் – 3 டீஸ்பூன் எல்லோ புட் கலர்...

Recent Comments