28.2 C
Jaffna
Tuesday, September 8, 2020
Home Sports Outdoor உங்கள் அனைவருக்கும் நான் கடமைப்பட்டிருக்கிறேன்: நன்றி தெரிவித்து ரோகித்!

உங்கள் அனைவருக்கும் நான் கடமைப்பட்டிருக்கிறேன்: நன்றி தெரிவித்து ரோகித்!

ராஜீவ் கேல் ரத்னா விருது பெற இருக்கும் ரோகித் சர்மா, ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

உங்கள் அனைவருக்கும் நான் கடமைப்பட்டிருக்கிறேன்:நன்றி தெரிவித்து ரோகித் சர்மா வீடியோ பதிவு ரோகித் சர்மா ‘ஹிட்மேன்’ என கிரிக்கெட் ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி தொடக்க பேட்ஸ்மேன் ரோகித் சர்மா.

நேற்று முன்தினம் சர்வதேச அளவில் சிறப்பாக விளையாடி இந்தியாவுக்கு பெருமைச் சேர்த்து கொடுத்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கான ராஜீவ் கேல் ரத்னா,அர்ஜுனா விருதுகளுக்கான பெயர்கள் அறிவிக்கப்பட்டன.

ரோஹித் ஷர்மாவுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் ரோகித் சர்மா அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஒரு வீடியோவை அவரது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

உங்கள் அனைவருக்கும் நான் கடமைப்பட்டிருக்கிறேன்: நன்றி தெரிவித்து ரோகித் சர்மா வீடியோ பதிவு

இந்த வீடியோவில் ‘‘வணக்கம் தோழர்களே. இத்தனை ஆண்டுகளாக நீங்கள் எல்லோரும் என் மீது காட்டிய அன்பிற்கும்,ஆதரவிற்கும் நன்றி.

இது ஒரு அற்புதமான பயணம்.நாட்டிலேயே சிறந்த விளையாட்டு வீரருக்காக கொடுக்கப்படும் விருதை நான் பெறுவது மிகப்பெரிய பாக்கியம். அதை நினைந்து நான் மிகவும் மகிழ்ச்சி கொள்கிறேன்.

இதன் மூலம் உங்கள் அனைவருக்கும் நான் கடமைப்பட்டிருக்கிறேன். உங்கள் ஆதரவு இல்லாமல் இது சாத்தியமில்லை.

இந்தியாவுக்காக நான் மேலும் பல பல பெருமைகளை தேடி தருவேன் என உறுதியளிக்கிறேன்.நாம் எல்லோரும் சமூக விலகலை கடைப்பிடித்து வருவதால்,உங்கள் அனைவரையும் வெர்ச்சுவலாக ஹக் செய்து கொள்கிறேன்’’ எனத் தெரிவித்துள்ளார்.

 

0 Reviews

Most Popular

கர்ப்பிணித் தாய்மார்கள் கொய்யா பழம் சாப்பிடலாமா…?

கொய்யா பழத்தில் போலிக் அமிலமும்,வைட்டமின் பி9 போன்ற சத்துக்கள் உள்ளது.இதனால் உங்கள் குழந்தையின் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை சரியான முறையில் செயல்படுத்த செய்கிறது. கர்ப்பிணிகளுக்கு இரும்பு சத்து என்பது அவசியம்,இந்த கொய்யா பழத்தில்...

தைராய்டு யாருக்கெல்லாம் ஏற்படலாம்?

நீங்கள் பெண்ணாக இருந்தால் தைராய்டு ஏற்படலாம். நீங்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றால் தைராய்டு சிக்கல்கள் வரலாம். கதிரியக்க அயோடின் அல்லது தைராய்டு எதிர்ப்பு மருந்துகளுடன் சிகிச்சை பெற்றிருக்கிறார்கள் என்றாலும் தைராய்டு...

பொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிந்துகொள்ள வழிகள் இதோ!

பெண்களிடம் பொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிய வழிகள் காதல் என்ற அற்புதமான ஒன்றை பலர் சீரியஸாக செய்தாலும்,சிலருக்கு இது ஒரு 'டைம் பாஸ்' போன்று உள்ளது. அப்படி காதலை டைம் பாஸாக செய்வது...

அரிசியில் பாயாசம் செய்யும் எளியமுறை!

அரிசியில் பாயாசம் செய்வது எப்படின்னு பார்க்கலாம் வாங்க..! தேவையான பொருட்கள்: நெய் – 2 டீஸ்பூன் ஏலக்காய் – 3 கிராம்பு – 3 மில்க்மேட் – 3 டீஸ்பூன் எல்லோ புட் கலர்...

Recent Comments