28.8 C
Jaffna
Monday, September 21, 2020
Home News ட்ரம்ப்பை கடும் குற்றச்சாட்டும் சகோதரி!

ட்ரம்ப்பை கடும் குற்றச்சாட்டும் சகோதரி!

அமெரிக்க ஜனாதிபதியும் தனது சகோதரருமான டொனால்ட் டிரம்ப் கொடூரமானவர், கொள்கையற்றவர் என டிரம்பின் சகோதரி பேசியுள்ள ஓடியோ பதிவு ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டிரம்ப் குடும்பத்தில் இருந்து பிரிந்து சென்ற டிரம்பின் மருமகள் மேரி டிரம்ப் என்பவரிடமே 2018 மற்றும் 2019 காலகட்டத்தில் மேரி ஆன் குறித்த அதிர்ச்சியூட்டும் கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளார்.

ஆனால் அந்த உரையாடலை மேரி டிரம்ப் பதிவு செய்து பாதுகாத்து வந்துள்ளார்.

டொனால்ட் டிரம்பின் சர்ச்சைக்குரிய புலம்பெயர்ந்தவர்களுக்கான கொள்கைகள்,அவர்களது குழந்தைகளை குடும்பங்களிலிருந்து பிரித்து வைக்க மேற்கொண்ட நடவடிக்கைகள் என அனைத்தையும் மேரி ஆன் விலாவாரியாக விமர்சித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் பொறுப்பான ஒரு பதவியில் இருந்து கொண்டு நாளுக்கு நாள் டிரம்ப் பொய் பேசுவதாகவும்,அவருக்கு கொள்கை என்பதே இல்லை எனவும் மேரி ஆன் காட்டமாக தெரிவித்துள்ளார்.

உலகின் கொடூரமான மனிதனை என் குடும்பம் எப்படி உருவாக்கியது என டிரம்பை குறிவைத்து மேரி டிரம்ப் புத்தகம் ஒன்றையும் கடந்த மாதம் வெளியிட்டிருந்தார்.

ட்ரம்ப் கொடூரமானவர், பொய்யரும் கூட ...

ஆனால் ஜனாதிபதியின் வெள்ளை மாளிகை அந்த புத்தகத்தை பொய்களின் புத்தகம் என குறிப்பிட்டுள்ளது.

தனக்காக கல்லூரி நுழைவுத் தேர்வை எழுத நண்பர் ஒருவருக்கு பணம் கொடுத்துத்தான் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் டிரம்ப் சேர்ந்தார் எனவும்,அதுவரை டிரம்பின் வீட்டுப்பாடங்களை தாம் முடித்து அளிப்பதாகவும் மேரி ஆன் அந்த ரகசிய பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவில் அடுத்த ஜனாதிபதிக்கான தேர்தல் விரைவில் நடக்க உள்ள நிலையில் ஜனாதிபதிக்கு எதிரான குற்றச்சாட்டு அவரது ரத்த தொடர்பு கொண்ட சகோதரியிடமிருந்து வந்துள்ளது.

ஆனால்,ஜனாதிபதி டிரம்போ அல்லது வெள்ளை மாளிகையோ இந்த பதிவு குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

0 Reviews

Most Popular

தேங்காய் கேக் செய்யும் எளிய முறை!

சமையலறை பகுதியில் தேங்காயை வைத்து தேங்காய் கேக் செய்வது எப்படி? பற்றித்தான் இந்த பகுதில் நாம் பார்க்க போகிறோம். இந்த ரெசிபி மிகவும் சுவையுள்ளதாகவும்,சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடியதாக...

நீருடன் எலுமிச்சையை கொதிக்க வைத்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!

உங்களுக்கு வயிற்று கோளாறு இருக்கும்போது உங்கள் அம்மா உங்களுக்கு ஒரு டம்ளர் எலுமிச்சை சாறு பரிந்துரைப்பதை கவனித்திருக்கலாம். வைட்டமின் சி அதிகமாக உள்ள எலுமிச்சை நீர், உங்கள் செரிமானத்தை மேம்படுத்துதல் என்று வரும் போது...

இரவில் உணவு உண்டால் உடல் பருமன் அதிகாரிக்குமா?

மற்ற நேரங்களை விட காலை தான் நம் மெட்டபாலிசம் அதிகமாக வேலை செய்யும்.அதிலும் முக்கியமாக இரவு நேரத்தில் சாப்பிடுவது நிச்சியம் உடலை பருமன் அதிகாரிக்கச் செய்யும். காலையில் உங்கள் மெட்டபாலிசம் அதிகமாக செயல்படுகிறது இரவில்...

நாப்கின் பயன்படுத்தும் போது இது போன்ற தவறுகளை செய்யாதீர்கள்: நோய்த்தொற்றை உண்டாக்குமாம்!

பொதுவாக பெண்கள் மாதவிடாய் நாட்களில் சுத்தமாக இருப்பது அவசியமானது ஆகும். குறிப்பாக இந்தசமயங்களில் பயன்படுத்தும் நாப்கின் குறித்த விழிப்புணர்வு எல்லா பெண்களிடம் இருக்க வேண்டும். நாப்கின் வாங்குவது முதல் பயன்படுத்தும் முறை வரை இது குறித்த...

Recent Comments