28.1 C
Jaffna
Wednesday, September 9, 2020
Home News பத்திரிகையாளர் முகத்தில் குத்துவேன் என மிரட்டல் விடுத்த பிரேசில் அதிபர்!

பத்திரிகையாளர் முகத்தில் குத்துவேன் என மிரட்டல் விடுத்த பிரேசில் அதிபர்!

னைவி மீதான ஊழல் குறித்து கேள்வி கேட்டதால் பத்திரிகையாளர் முகத்தில் குத்துவேன் என பிரேசில் அதிபர் ஜெயீர் போல்சனாரோ மிரட்டியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

பிரேசில் அதிபர் ஜெயீர் போல்சனாரோ சர்ச்சைகளுக்கு பெயர் போனவராக இருந்து வருகிறார்.அவர் அதிபராக பதவி ஏற்றது முதலே,ஏராளமான சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.

இந்த நிலையில் தனது மனைவியின் மீதான ஊழல் புகார் குறித்து கேள்வி எழுப்பிய பத்திரிகையாளர் ஒருவரை போல்சனாரோ மிரட்டியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

2011-ம் ஆண்டு மற்றும் 2016-ம் ஆண்டுக்கு இடையில்,ஜெயீர் போல்சனாரோவின் மனைவி,மிச்செல் போல்சனாரோவின் வங்கிக்கணக்கில் ஜெயீர் போல்சனாரோவின் நண்பரும் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியுமான கியூரோஸ் என்பவர் பல மில்லியன் டாலர் டெபாசிட் செய்தது குறித்து குளோபோ பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது.

இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.இந்த நிலையில் நேற்று முன்தினம் அதிபர் ஜெயீர் போல்சனாரோ தலைநகர் பிரேசிலியாவில் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

பத்திரிகையாளர் முகத்தில் குத்துவேன் என மிரட்டல் விடுத்த பிரேசில் அதிபர்

குளோபோ செய்தி நிறுவனத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர், பிரேசில் அதிபரிடம் அவரது மனைவியின் வங்கிக்கணக்குகள் குறித்த விவரத்தை கேள்வியாகக் கேட்டார்.

இதனால் கோபம் அடைந்த ஜெயீர் போல்சனாரோ,“உங்கள் முகத்தில் குத்த விரும்புகிறேன்.அது சரிதானே?” என்று கேட்டார்.

இதற்கு சக பத்திரிகையாளர்கள் எதிர்ப்புத் தெரிவிக்க,ஜெயீர் போல்சனாரோ பத்திரிக்கையாளர் சந்திப்பில் இருந்து பாதியில் வெளியேறினார்.

0 Reviews

Most Popular

கர்ப்பிணித் தாய்மார்கள் கொய்யா பழம் சாப்பிடலாமா…?

கொய்யா பழத்தில் போலிக் அமிலமும்,வைட்டமின் பி9 போன்ற சத்துக்கள் உள்ளது.இதனால் உங்கள் குழந்தையின் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை சரியான முறையில் செயல்படுத்த செய்கிறது. கர்ப்பிணிகளுக்கு இரும்பு சத்து என்பது அவசியம்,இந்த கொய்யா பழத்தில்...

தைராய்டு யாருக்கெல்லாம் ஏற்படலாம்?

நீங்கள் பெண்ணாக இருந்தால் தைராய்டு ஏற்படலாம். நீங்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றால் தைராய்டு சிக்கல்கள் வரலாம். கதிரியக்க அயோடின் அல்லது தைராய்டு எதிர்ப்பு மருந்துகளுடன் சிகிச்சை பெற்றிருக்கிறார்கள் என்றாலும் தைராய்டு...

பொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிந்துகொள்ள வழிகள் இதோ!

பெண்களிடம் பொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிய வழிகள் காதல் என்ற அற்புதமான ஒன்றை பலர் சீரியஸாக செய்தாலும்,சிலருக்கு இது ஒரு 'டைம் பாஸ்' போன்று உள்ளது. அப்படி காதலை டைம் பாஸாக செய்வது...

அரிசியில் பாயாசம் செய்யும் எளியமுறை!

அரிசியில் பாயாசம் செய்வது எப்படின்னு பார்க்கலாம் வாங்க..! தேவையான பொருட்கள்: நெய் – 2 டீஸ்பூன் ஏலக்காய் – 3 கிராம்பு – 3 மில்க்மேட் – 3 டீஸ்பூன் எல்லோ புட் கலர்...

Recent Comments