28.3 C
Jaffna
Tuesday, September 22, 2020
Home Lifestyle Home Garden வில்வம் மரத்தின் மருத்துவ குணங்கள்!

வில்வம் மரத்தின் மருத்துவ குணங்கள்!

வேர் நோய் நீக்கி உடல் தேற்றும்,சதை நரம்புகளைச் சுருங்கச் செய்யும்.குருதிக் கசிவை நிறுத்தும்.பழம் மலமிளக்கும்.நோய் நீக்கி உடல் தேற்றும்.

பழ ஓடு காச்சல் போக்கும்.தாது எரிச்சல் தணிக்கும்.பிஞ்சு விந்து வெண்ணீர்க் குறைகளையும் நீக்கும்.பூ மந்தத்தைப் போக்கும்.

இதன் பூ வாய் நாற்றத்தைப் போக்கும்.விஷத்தை முறிக்கும்.பழம் விஷ நோய்களைத் தடுக்கும் மலக்கட்டை ஒழிக்கும்,நாக்கு புண்களை ஆற்றும்.உடல் வலுவைக் கொடுக்கும்.அழகையும் உடல் வன்மையையும் உண்டு பண்ணும்.

வில்வ காயை உடைத்து உள்ளே உள்ள சதையைக் கத்தியால் தோண்டி எடுத்து,புளி,இஞ்சி,கொத்துமல்லி,மிளகாய் வற்றல்,பூண்டு சேர்த்து துவையல் அரைத்துச் சாப்பிட்டால் மேற்கண்ட நோய்களைக் குணப்படுத்தும்.

வில்வத் தளிரை வதக்கிச் சூட்டுடன் கண் இமைகளில் ஒற்றடம் வைக்க கண் வலி,கண் சிகப்பு, அரித்தல் குணமாகும்.இதன் இலை காச நோயைத் தடுக்கும். தொத்து வியாதிகளை நீக்கும்.

வெட்டை நோயைக் குணமாகும்.வேட்டைப் புண்களை ஆற்றும்.விஷப் பாண்டு ரோகத்தை குணமாக்கும்.பித்தத்தைப் போக்கும்.வாந்தியை நிறுத்தும்.உடல் வெப்பத்தைத் தணிக்கும்.சன்னி ஜுரங்களைப் போக்கும்.

பாண்டு,சோகை,மேக நோய்,வாதவலி,பசியின்மை,கை – கால் பிடிப்பு, கிரந்தி நோய்,சளி,தடிமன், இருமல்,காசம்,காமாலை,வீக்கம்,உடல் அசதி,காது, கண்நோய்கள்,இரத்த பேதி,அரிப்பு,மாந்தம்,மலேரியா,போன்ற எல்லா வகை நோய்களையும் குணமாக்க வல்லது வில்வம்.

பட்டை வாத சுரத்தைத் தணிக்கும்.முறைக் காச்சலைத் தடுக்கும்.நெஞ்சு வலியைப் போக்கும் மூச்சடைப்பைத் தவிற்கும்.

வில்வ பழத்தின் ஓட்டை உடைத்து உட்சதையில் சர்க்கரை சேர்த்து ஒரு தேக்கரண்டியில் கிண்டி உண்ணலாம்,சில நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பித்த நோயைக் கண்டிக்கும்.

வாய்புண்,குடல் புண் போன்ற நோய்களையும் தீர்க்க வல்லது காசநோயை குணமாக்கும்.சளி,தடிமன்,மூக்கடைப்பு,கண் எரிச்சல் போன்ற வற்றையும் குணமாக்கும் வில்வப் பழம்.

0 Reviews

Most Popular

தேங்காய் கேக் செய்யும் எளிய முறை!

சமையலறை பகுதியில் தேங்காயை வைத்து தேங்காய் கேக் செய்வது எப்படி? பற்றித்தான் இந்த பகுதில் நாம் பார்க்க போகிறோம். இந்த ரெசிபி மிகவும் சுவையுள்ளதாகவும்,சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடியதாக...

நீருடன் எலுமிச்சையை கொதிக்க வைத்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!

உங்களுக்கு வயிற்று கோளாறு இருக்கும்போது உங்கள் அம்மா உங்களுக்கு ஒரு டம்ளர் எலுமிச்சை சாறு பரிந்துரைப்பதை கவனித்திருக்கலாம். வைட்டமின் சி அதிகமாக உள்ள எலுமிச்சை நீர், உங்கள் செரிமானத்தை மேம்படுத்துதல் என்று வரும் போது...

இரவில் உணவு உண்டால் உடல் பருமன் அதிகாரிக்குமா?

மற்ற நேரங்களை விட காலை தான் நம் மெட்டபாலிசம் அதிகமாக வேலை செய்யும்.அதிலும் முக்கியமாக இரவு நேரத்தில் சாப்பிடுவது நிச்சியம் உடலை பருமன் அதிகாரிக்கச் செய்யும். காலையில் உங்கள் மெட்டபாலிசம் அதிகமாக செயல்படுகிறது இரவில்...

நாப்கின் பயன்படுத்தும் போது இது போன்ற தவறுகளை செய்யாதீர்கள்: நோய்த்தொற்றை உண்டாக்குமாம்!

பொதுவாக பெண்கள் மாதவிடாய் நாட்களில் சுத்தமாக இருப்பது அவசியமானது ஆகும். குறிப்பாக இந்தசமயங்களில் பயன்படுத்தும் நாப்கின் குறித்த விழிப்புணர்வு எல்லா பெண்களிடம் இருக்க வேண்டும். நாப்கின் வாங்குவது முதல் பயன்படுத்தும் முறை வரை இது குறித்த...

Recent Comments