29.3 C
Jaffna
Monday, September 7, 2020
Home News North America அதிபர் பதவிக்கு என் மகள் தான் பொருத்தமானவர்: டிரம்ப்

அதிபர் பதவிக்கு என் மகள் தான் பொருத்தமானவர்: டிரம்ப்

கமலா ஹரிஸ் அதிபராக இருப்பதற்கு தகுதி வாய்ந்தவர் இல்லை என்று அமெரிக்கா அதிபர் தேர்தலுக்கு போட்டியிடும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது.இதில் இரண்டாவது முறையாக டிரம்ப் போட்டியிடுகிறார்.

இந்நிலையில் டிரம்ப்,ஒரு பெண்ணை அமெரிக்க அதிபராகப் பார்ப்பதற்கு நான் ஆதரவு அளிக்கிறேன்.ஆனால்,அப்பதவிக்கு வெள்ளை மாளிகையின் முதன்மைச் செயலாளர் இவான்கா ட்ரம்ப்தான் பொருத்தமாக இருப்பார்

கமலா ஹாரிஸுக்கு அந்தப் பதவியில் அமரத் தகுதி இல்லை.கமலா,அதிபர் வேட்பாளர் போட்டியிலிருந்து வெளியேறி விடுவார்.ஏனெனில் அவர் எந்த வாக்குகளையும் பெற்றிருக்க மாட்டார் என்று கூறியுள்ளார்.

ஜனநாயகக் கட்சித் தலைவர் ஜோ பிடன் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் அமெரிக்கா,சீனாவுக்குச் சொந்தமாகிவிடும். அமெரிக்க வேலைவாய்ப்புகள் சீனாவுக்கு அளிக்கப்படும் என்று அமெரிக்க  டிரம்ப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

ஏனெனில் வரவிருக்கும் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பிடன் அதிபர் வேட்பாளராகவும்,இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் துணை அதிபர் வேட்பாளராகவும் போட்டியிடுகின்றனர்.

அமெரிக்காவின் அதிபர் மற்றும் துணை அதிபராக குடியரசுக் கட்சி சார்பாக டிரம்ப் மற்றும் மைக் பென்ஸ் மீண்டும் போட்டியிடுகின்றனர்.

இதனைத் தொடர்ந்து ட்ரம்ப் மற்றும் மைக் பென்ஸ் தீவிரமாகத் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Reviews

Most Popular

கர்ப்பிணித் தாய்மார்கள் கொய்யா பழம் சாப்பிடலாமா…?

கொய்யா பழத்தில் போலிக் அமிலமும்,வைட்டமின் பி9 போன்ற சத்துக்கள் உள்ளது.இதனால் உங்கள் குழந்தையின் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை சரியான முறையில் செயல்படுத்த செய்கிறது. கர்ப்பிணிகளுக்கு இரும்பு சத்து என்பது அவசியம்,இந்த கொய்யா பழத்தில்...

தைராய்டு யாருக்கெல்லாம் ஏற்படலாம்?

நீங்கள் பெண்ணாக இருந்தால் தைராய்டு ஏற்படலாம். நீங்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றால் தைராய்டு சிக்கல்கள் வரலாம். கதிரியக்க அயோடின் அல்லது தைராய்டு எதிர்ப்பு மருந்துகளுடன் சிகிச்சை பெற்றிருக்கிறார்கள் என்றாலும் தைராய்டு...

பொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிந்துகொள்ள வழிகள் இதோ!

பெண்களிடம் பொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிய வழிகள் காதல் என்ற அற்புதமான ஒன்றை பலர் சீரியஸாக செய்தாலும்,சிலருக்கு இது ஒரு 'டைம் பாஸ்' போன்று உள்ளது. அப்படி காதலை டைம் பாஸாக செய்வது...

அரிசியில் பாயாசம் செய்யும் எளியமுறை!

அரிசியில் பாயாசம் செய்வது எப்படின்னு பார்க்கலாம் வாங்க..! தேவையான பொருட்கள்: நெய் – 2 டீஸ்பூன் ஏலக்காய் – 3 கிராம்பு – 3 மில்க்மேட் – 3 டீஸ்பூன் எல்லோ புட் கலர்...

Recent Comments