29.1 C
Jaffna
Sunday, September 6, 2020
Home Business உலகின் மிக அதிக விலைக்கு விற்கப்பட்ட செம்மறியாடு: என்ன விலை தெரியுமா?

உலகின் மிக அதிக விலைக்கு விற்கப்பட்ட செம்மறியாடு: என்ன விலை தெரியுமா?

ஸ்கொட்லாந்தில் அரியவகை செம்மறியாடு ஒன்று உலகின் மிக அதிக விலைக்கு விற்கப்பட்டுள்ளது.

ஸ்கொட்லாந்தில் Texel வகை செம்மறியாடு ஒன்று அதன் உரிமையாளரால் சுமார் 368,000 பவுண்டுகளுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்ட Texel வகை செம்மறியாடுகளின் விற்பனை விழாவில் Charlie Boden என்பவரின்,பிறந்து ஆறு மாதமேயான Texel செம்மறியாடுக்கு உலககின் மிக அதிகமான விலை கிடைத்துள்ளது.

இது பிரித்தானியாவில் மட்டுமின்றி உலக அளவில் சாதனை விலை என்றே கூறப்படுகிறது.

இதுவரை Texel செம்மறியாடுக்கு அதிகபட்சமாக 2009 ஆம் ஆண்டு 230,000 பவுண்டுகள் விலை கிடைத்துள்ளதே சாதனையாக கருதப்பட்டது.

அந்த சாதனை வியாழனன்று முறியடிக்கப்பட்டுள்ளது.டெக்சல் செம்மறி ஆடுகள் நெதர்லாந்து கடற்கரையில் ஒரு சிறிய தீவில் இருந்து முதன் முதலில் உருவாகின.

தற்போது சாதனை விலைக்கு வாங்கப்பட்ட இந்த டெக்சல் செம்மறி ஆடானது மூன்று விவசாயிகளால் கூட்டாக வாங்கப்பட்டுள்ளது.

இனப்பெருக்கம் மூலம் தங்கள் முதலீட்டை திரும்பப் பெறுவார்கள் என்று மூன்று விவசாயிகளும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

0 Reviews

Most Popular

கர்ப்பிணித் தாய்மார்கள் கொய்யா பழம் சாப்பிடலாமா…?

கொய்யா பழத்தில் போலிக் அமிலமும்,வைட்டமின் பி9 போன்ற சத்துக்கள் உள்ளது.இதனால் உங்கள் குழந்தையின் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை சரியான முறையில் செயல்படுத்த செய்கிறது. கர்ப்பிணிகளுக்கு இரும்பு சத்து என்பது அவசியம்,இந்த கொய்யா பழத்தில்...

தைராய்டு யாருக்கெல்லாம் ஏற்படலாம்?

நீங்கள் பெண்ணாக இருந்தால் தைராய்டு ஏற்படலாம். நீங்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றால் தைராய்டு சிக்கல்கள் வரலாம். கதிரியக்க அயோடின் அல்லது தைராய்டு எதிர்ப்பு மருந்துகளுடன் சிகிச்சை பெற்றிருக்கிறார்கள் என்றாலும் தைராய்டு...

பொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிந்துகொள்ள வழிகள் இதோ!

பெண்களிடம் பொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிய வழிகள் காதல் என்ற அற்புதமான ஒன்றை பலர் சீரியஸாக செய்தாலும்,சிலருக்கு இது ஒரு 'டைம் பாஸ்' போன்று உள்ளது. அப்படி காதலை டைம் பாஸாக செய்வது...

அரிசியில் பாயாசம் செய்யும் எளியமுறை!

அரிசியில் பாயாசம் செய்வது எப்படின்னு பார்க்கலாம் வாங்க..! தேவையான பொருட்கள்: நெய் – 2 டீஸ்பூன் ஏலக்காய் – 3 கிராம்பு – 3 மில்க்மேட் – 3 டீஸ்பூன் எல்லோ புட் கலர்...

Recent Comments