28 C
Jaffna
Tuesday, September 8, 2020
Home Lifestyle Food காளான் 65 செய்முறை விளக்கம்..!

காளான் 65 செய்முறை விளக்கம்..!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய சுவையான..மிகவும் அருமையான…காளான் 65 செய்வது எப்படி என்று இப்போது இந்த பகுதியில் பார்ப்போம் வாங்க..!

தேவையான பொருட்கள்:

  • காளான் – 200 கிராம்
  • எண்ணெய் – 1/2 லிட்டர்
  • இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
  • உப்பு – தேவைக்கேற்ப
  • தண்ணீர் – தேவையான அளவு
  • அரிசி மாவு – 1 மேசைக்கரண்டி
  • மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
  • மல்லி தூள் – 1/2 தேக்கரண்டி
  • கடலை மாவு – 2 மேசைக்கரண்டி
  • சோள மாவு – 1 1/2 மேசைக்கரண்டி
  • மிளகு தூள் – 1/2 தேக்கரண்டி
  • கரம் மசாலா – 1 தேக்கரண்டி

செய்முறை:

  • 200 கிராம் காளானை மண் இல்லாதவாறு சுத்தமாக கழுவி தனியாக வைத்து கொள்ளவும்.
  • இப்போது 65 மசாலாவை எப்படி தயார் செய்ய வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்.
  • காளான் 65 செய்வதற்கு முதலில் ஒரு சுத்தமான பவுலை எடுத்துக்கொள்ளவும்.
  • அவற்றில் இரண்டு மேசைக்கரண்டி கடலை மாவு,சோள மாவு 1 1/2 மேசைக்கரண்டி,அரிசி மாவு 1 மேசைக்கரண்டி,மிளகாய் தூள் இரண்டு தேக்கரண்டி,மல்லி தூள் 1/2 தேக்கரண்டி,மிளகு தூள் 1/2 தேக்கரண்டி, கரம் மசாலா 1 தேக்கரண்டி,இஞ்சி பூண்டு விழுது 1 தேக்கரண்டி மற்றும் தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக பிசைய வேண்டும்.
  • பின்பு பிசைந்த மாவுடன் சுத்தம் செய்து வைத்துள்ள காளானை சேர்த்து திரும்பவும் ஒரு முறை நன்றாக பிசைந்து 15 நிமிடங்கள் நன்றாக ஊறவைக்க வேண்டும்.
  • 15 நிமிடம் நன்றாக மசாலாவில் காளான் ஊறியதும்,அடுப்பில் ஒரு கடாயை வைத்து அவற்றில் எண்ணெய் ஊற்ற வேண்டும்.
  • எண்ணெய் நன்கு சூடேறியதும்,பிசைந்து வைத்துள்ள காளானை எண்ணெயில் சேர்த்து பொரித்து எடுத்தால் சுவையான காளான் 65 தயார்…
  • இந்த காளான் 65 மழைக்காலங்களில் சாப்பிடக்கூடிய ஒரு அருமையான ரெசிபியாகும் வீட்டில் செய்து சுவையுங்கள்.
  • முக்கிய குறிப்பு:
    மாவானது தோசை மாவு பதத்திற்கு இருக்க வேண்டும்.

0 Reviews

Most Popular

கர்ப்பிணித் தாய்மார்கள் கொய்யா பழம் சாப்பிடலாமா…?

கொய்யா பழத்தில் போலிக் அமிலமும்,வைட்டமின் பி9 போன்ற சத்துக்கள் உள்ளது.இதனால் உங்கள் குழந்தையின் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை சரியான முறையில் செயல்படுத்த செய்கிறது. கர்ப்பிணிகளுக்கு இரும்பு சத்து என்பது அவசியம்,இந்த கொய்யா பழத்தில்...

தைராய்டு யாருக்கெல்லாம் ஏற்படலாம்?

நீங்கள் பெண்ணாக இருந்தால் தைராய்டு ஏற்படலாம். நீங்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றால் தைராய்டு சிக்கல்கள் வரலாம். கதிரியக்க அயோடின் அல்லது தைராய்டு எதிர்ப்பு மருந்துகளுடன் சிகிச்சை பெற்றிருக்கிறார்கள் என்றாலும் தைராய்டு...

பொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிந்துகொள்ள வழிகள் இதோ!

பெண்களிடம் பொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிய வழிகள் காதல் என்ற அற்புதமான ஒன்றை பலர் சீரியஸாக செய்தாலும்,சிலருக்கு இது ஒரு 'டைம் பாஸ்' போன்று உள்ளது. அப்படி காதலை டைம் பாஸாக செய்வது...

அரிசியில் பாயாசம் செய்யும் எளியமுறை!

அரிசியில் பாயாசம் செய்வது எப்படின்னு பார்க்கலாம் வாங்க..! தேவையான பொருட்கள்: நெய் – 2 டீஸ்பூன் ஏலக்காய் – 3 கிராம்பு – 3 மில்க்மேட் – 3 டீஸ்பூன் எல்லோ புட் கலர்...

Recent Comments