28.4 C
Jaffna
Tuesday, September 22, 2020
Home Lifestyle Food பிரண்டை குதிரைவாலி தோசை செய்முறை விளக்கம்..!

பிரண்டை குதிரைவாலி தோசை செய்முறை விளக்கம்..!

பிரண்டை பசி உணர்வை தூண்டும்.குதிரைவாலி அரிசி வயிற்றுக் கோளாறுகளைத் தீர்க்கும்.இரண்டையும் வைத்து சத்தான பிரண்டை குதிரைவாலி தோசை செய்முறை விளக்கம் பற்றி இந்த பகுதியில் பார்ப்போம் வாங்க..!

தேவையான பொருட்கள்:

  • நுனிக் கொழுந்து பிரண்டை துண்டுகள் – 10
  • வெந்தயம் – சிறிதளவு
  • உப்பு மற்றும் நல்லெண்ணெய் – தேவையான அளவு
  • குதிரைவாலி அரிசி – 2 கப்
  • உளுந்தம் பருப்பு – 1/4 கப்

செய்முறை:

  • குதிரைவாலி,வெந்தயம் மற்றும் உளுந்து ஆகியவற்றை தனித்தனியாக மூன்று மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.
  • பின்பு ஒன்றாக சேர்த்து தோசை மாவு பதத்திற்கு அரைத்து கொள்ளவும்.
    பின்பு உப்பு சேர்த்து கலந்து வைத்து கொள்ளவும்.
  • பிரண்டையை தோல் நிக்கி சிறுசிறு துண்டுகளாக நறுக்கி எண்ணெயில் வதக்கிக் கொள்ளவும்.
  • வதக்கிய பிரண்டை ஆறியவுடன் குதிரைவாலி மாவுடன் சேர்த்து நன்றாக கலந்து,8 மணி நேரம் வரை அப்படியே வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் மாவு புளித்திருக்கும்.
  • பிறகு தோசை கல்லில் தோசையாக ஊற்றி,தோசை வெந்ததும் திருப்பி போட வேண்டும்.தோசை இருபுறமும் வெந்ததும் எடுக்க வேண்டும்.
  • இந்த தோசையை காரச் சட்னியுடன் அனைவருக்கும் பரிமாறவும்.

0 Reviews

Most Popular

தேங்காய் கேக் செய்யும் எளிய முறை!

சமையலறை பகுதியில் தேங்காயை வைத்து தேங்காய் கேக் செய்வது எப்படி? பற்றித்தான் இந்த பகுதில் நாம் பார்க்க போகிறோம். இந்த ரெசிபி மிகவும் சுவையுள்ளதாகவும்,சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடியதாக...

நீருடன் எலுமிச்சையை கொதிக்க வைத்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!

உங்களுக்கு வயிற்று கோளாறு இருக்கும்போது உங்கள் அம்மா உங்களுக்கு ஒரு டம்ளர் எலுமிச்சை சாறு பரிந்துரைப்பதை கவனித்திருக்கலாம். வைட்டமின் சி அதிகமாக உள்ள எலுமிச்சை நீர், உங்கள் செரிமானத்தை மேம்படுத்துதல் என்று வரும் போது...

இரவில் உணவு உண்டால் உடல் பருமன் அதிகாரிக்குமா?

மற்ற நேரங்களை விட காலை தான் நம் மெட்டபாலிசம் அதிகமாக வேலை செய்யும்.அதிலும் முக்கியமாக இரவு நேரத்தில் சாப்பிடுவது நிச்சியம் உடலை பருமன் அதிகாரிக்கச் செய்யும். காலையில் உங்கள் மெட்டபாலிசம் அதிகமாக செயல்படுகிறது இரவில்...

நாப்கின் பயன்படுத்தும் போது இது போன்ற தவறுகளை செய்யாதீர்கள்: நோய்த்தொற்றை உண்டாக்குமாம்!

பொதுவாக பெண்கள் மாதவிடாய் நாட்களில் சுத்தமாக இருப்பது அவசியமானது ஆகும். குறிப்பாக இந்தசமயங்களில் பயன்படுத்தும் நாப்கின் குறித்த விழிப்புணர்வு எல்லா பெண்களிடம் இருக்க வேண்டும். நாப்கின் வாங்குவது முதல் பயன்படுத்தும் முறை வரை இது குறித்த...

Recent Comments