28.2 C
Jaffna
Wednesday, September 9, 2020
Home Lifestyle Disease குழந்தைகள் அதிகமாக டூத்பேஸ்டை பயன்படுத்தினால் ஏற்படும் பாதிப்பு!

குழந்தைகள் அதிகமாக டூத்பேஸ்டை பயன்படுத்தினால் ஏற்படும் பாதிப்பு!

உங்கள் குழந்தைக்கு டூத்பேஸ்ட் பிடிக்குமா?அதாவது அதனை பல்துலக்க பயன்படுத்துவதோடு மட்டுமில்லாமல் அதிகமாக அதனை உட்கொள்ள உங்கள் குழந்தைகள் விரும்புகிறார்களா?ஆம்,என்றால் அதனை உடனடியாக நிறுத்த வேண்டும்.

அளவுக்கு அதிகமாக,தேவைக்கு அதிகமான அளவு டூத் பேஸ்ட் பயன்படுத்தும் குழந்தைகளுக்கு,அவர்கள் பெரியவர்களாகும்போது “டென்டல் ப்ளுரோசிஸ்” என்னும் பாதிப்பு ஏற்படுவதற்கான அபாயம் அதிகரிப்பதாக சமீபத்திய ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

உங்கள் குழந்தை பருவத்தின் முதல் எட்டு ஆண்டுகளில்,அதிகரித்த ப்ளுரைடு வெளிப்பாட்டின் காரணமாக உங்கள் பற்கள் பாதிக்கப்படும் நிலையை ப்ளுரோசிஸ் என்று அடிப்டையில் கூறுகின்றனர்.ப்ளுரைடு என்பது ஒரு கனிமம் ஆகும்.இது தண்ணீர் மற்றும் மண்ணில் அதிகமாகக் காணப்படும்.

தண்ணீர் அதிக அளவு பருகும் மனிதர்களுக்கு ப்ளுரைடு அளவு இயற்கையாகவே அதிகமான அளவில் இருப்பதாகவும் அவர்களுக்கு குறைந்த அளவு பற்குழிகள் இருந்ததாகவும் 70 ஆண்டுகளுக்கு முன்பே ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.இதன் காரணமாக,டூத்பேஸ்ட், மவுத் வாஷ்,குழாய் நீர் மற்றும் இதர பொருட்களில் ப்ளுரைடு சேர்த்து தயாரிக்கப்பட்டது.

குழந்தைப் பருவத்தில்,பற்கள் உருவாகும் நிலையில்,அதிகரித்த ப்ளுரைடு பயன்பாடு,டென்டல் ப்ளுரோசிஸ் அல்லது பற்களில் கோடுகள் உண்டாவது அல்லது பற்களில் திட்டுக்கள் தோன்றுவது போன்றவற்றிற்கு வாய்ப்பு ஏற்படுத்தித் தருவதாக சில ஆய்வுகள் கூறுகின்றன.

பொதுவாக ஒரு பட்டாணி அளவிற்கு டூத்பேஸ்ட் பயன்படுத்துவது போதும் என்று நிபுணர்கள் பரிந்துரைத்தாலும்,3-6 வயது குழந்தைகள் பெரும்பாலும் ஒரு முழு பிரஷ் அல்லது பாதி பிரஷ் அளவிற்கு டூத்பேஸ்ட் பயன்படுத்துவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

“ப்ளுரைடு என்பது பல அற்புத நன்மைகளைக் கொண்டது,இருந்தாலும் அதனை கவனமாகக் கையாள வேண்டும்”,என்று சிகாகோவில் உள்ள குழந்தைகளுக்கான டென்டிஸ்ட் மேரி ஹேஸ் டெய்லி மெயில் பத்திரிகைக்கு கூறினார்.

அதிக டூத்பேஸ்ட் பயன்பாட்டால் எத்தனை குழந்தைகளுக்கு பற்களில் பாதிப்பு,திட்டுக்கள்,கோடுகள் ஆகியவை இருந்தது என்பது கூறப்படவில்லை என்றாலும்,3 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் ஒரு அரிசிமணி அளவிற்கு டூத் பேஸ்ட் பயன்படுத்துவது போதுமானது என்றும்,3-6 வயது வரை உள்ள குழந்தைகள் ஒரு பட்டாணி அளவிற்கு டூத்பேஸ்ட் பயன்படுத்துவது போதுமானது என்றும் கூறுகின்றனர்.

மேலும் குழந்தைகளுக்காக தயாரிக்கப்படும் பேஸ்டில் சுவை அதிகம் இருப்பதாகவும் கூறுகின்றனர்.அதனால் குழந்தைகள் தங்கள் விருப்பம் போல் டூத்பேஸ்ட் பயன்படுத்துகின்றனர் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறினா்.

டூத்பேஸ்ட் என்பது ஒரு உணவு அல்ல,விரும்பிய அளவிற்கு உட்கொள்வதற்கு, எனவே,குழந்தைகளின் டூத்பேஸ்ட் பயன்பாட்டை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டியது பெற்றோர்களே என்று கூறி அவர்கள் ஆய்வை நிறைவு செய்தனர்.

0 Reviews

Most Popular

கர்ப்பிணித் தாய்மார்கள் கொய்யா பழம் சாப்பிடலாமா…?

கொய்யா பழத்தில் போலிக் அமிலமும்,வைட்டமின் பி9 போன்ற சத்துக்கள் உள்ளது.இதனால் உங்கள் குழந்தையின் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை சரியான முறையில் செயல்படுத்த செய்கிறது. கர்ப்பிணிகளுக்கு இரும்பு சத்து என்பது அவசியம்,இந்த கொய்யா பழத்தில்...

தைராய்டு யாருக்கெல்லாம் ஏற்படலாம்?

நீங்கள் பெண்ணாக இருந்தால் தைராய்டு ஏற்படலாம். நீங்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றால் தைராய்டு சிக்கல்கள் வரலாம். கதிரியக்க அயோடின் அல்லது தைராய்டு எதிர்ப்பு மருந்துகளுடன் சிகிச்சை பெற்றிருக்கிறார்கள் என்றாலும் தைராய்டு...

பொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிந்துகொள்ள வழிகள் இதோ!

பெண்களிடம் பொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிய வழிகள் காதல் என்ற அற்புதமான ஒன்றை பலர் சீரியஸாக செய்தாலும்,சிலருக்கு இது ஒரு 'டைம் பாஸ்' போன்று உள்ளது. அப்படி காதலை டைம் பாஸாக செய்வது...

அரிசியில் பாயாசம் செய்யும் எளியமுறை!

அரிசியில் பாயாசம் செய்வது எப்படின்னு பார்க்கலாம் வாங்க..! தேவையான பொருட்கள்: நெய் – 2 டீஸ்பூன் ஏலக்காய் – 3 கிராம்பு – 3 மில்க்மேட் – 3 டீஸ்பூன் எல்லோ புட் கலர்...

Recent Comments