28.4 C
Jaffna
Sunday, September 20, 2020
Home Lifestyle Food அரிசியில் பாயாசம் செய்யும் எளியமுறை!

அரிசியில் பாயாசம் செய்யும் எளியமுறை!

அரிசியில் பாயாசம் செய்வது எப்படின்னு பார்க்கலாம் வாங்க..!

தேவையான பொருட்கள்:

  • நெய் – 2 டீஸ்பூன்
  • ஏலக்காய் – 3
  • கிராம்பு – 3
  • மில்க்மேட் – 3 டீஸ்பூன்
  • எல்லோ புட் கலர் – தேவையான அளவு
  • நறுக்கிய முந்திரி – சிறிதளவு
  • தண்ணீர் – 2 கிளாஸ் அளவு
  • khoya – 1/2 கப்
  • சர்க்கரை – 2 கப்
  • நறுக்கிய பிஸ்தா – சிறிதளவு
  • நறுக்கிய பாதாம் – சிறிதளவு
  • திராட்சை – சிறிதளவு
  • பால் – 1 லிட்டர்
  • அரிசி – 1 கப்

செய்முறை:

  • முதலில் கடாயில் நெய் 2 டீஸ்பூன் எடுத்துக்கொள்ளவும்.அடுத்து ஏலக்காய் 3,கிராம்பு 3 சேர்க்கவும்.மூன்றையும் சேர்த்து நெய்யுடன் நன்றாக வதக்கி கொள்ளவும்.
  • நன்றாக வதக்கிய பின் பால் 1 லிட்டர் சேர்த்துக்கொள்ளவும்.பாலை நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.பால் நன்றாக கொதித்த பிறகு அரிசி 1 கப் சேர்த்துக்கொள்ளவேண்டும்.
  • அரிசியை நன்றாக கிளறிவிட வேண்டும்.அரிசி வெந்தபிறகு தண்ணீர் 2 கிளாஸ் அளவிற்கு சேர்த்துக்கொள்ள வேண்டும்.தண்ணீர் சேர்த்துவிட்டு நன்றாக கொதிக்கவைக்க வேண்டும்.
  • அதன்பிறகு khoya 1/2 கப் சேர்க்க வேண்டும். சேர்த்தபிறகு நன்றாக கரண்டியால் வைத்து மசித்துவிட வேண்டும்.
  • இதனுடன் 2 கப் சர்க்கரை சேர்த்து நன்றாக கலக்கவும்.சர்க்கரை சேர்த்த பிறகு நன்றாக கொதித்து வரும் நிலையில் மில்க்மேட் 3 டீஸ்பூன் சேர்க்கவும்.
  • மில்க்மேட் சேர்த்தப்பின் நன்றாக கலக்கவும்.அடுத்ததாக மில்க்மேட் நன்றாக கொதித்தபிறகு எல்லோ புட் கலர் தேவையான அளவு சேர்த்து கொள்ளவும்.
  • எல்லோ புட் கலர் சேர்ந்தவுடன் நன்றாக மிக்ஸ் பண்ணவும்.எல்லோ புட் கலரை சேர்த்து நன்றாக கொதித்த பின் தனியாக ஒரு கடாயில் 1 ஸ்பூன் நெய் ஊற்றிக்கொள்ளவும்.
  • நெய்யுடன் நறுக்கிய முந்திரி சிறிதளவு சேர்த்து வதக்கி கொள்ளவும்.
  • அடுத்ததாக நெய்யுடன் நறுக்கிய பிஸ்தா சிறிதளவு சேர்த்து வதக்கவும்.
  • பிஸ்தா சேர்த்தபிறகு அதனுடன் நறுக்கிய பாதாம் சிறிதளவு சேர்த்து நன்றாக நெய்யுடன் வதக்கவும்.
  • கடைசியாக நெய்யில் திராட்சை சிறிதளவு சேர்த்து எல்லாவற்றையும் பழுப்பு நிறம் வரும் அளவிற்கு நன்றாக வதக்கி கொள்ளவும்.
  • நன்றாக வதக்கிய பின் தனி பிளேட்டில் வதக்கியதை எடுத்துக்கொள்ளவும்.
  • அடுத்ததாக கடாயில் உள்ள அரிசி பாயாசத்தில் நெய்யில் வதக்கி வைத்துள்ளதை சேர்த்துக்கொள்ளவும்.
  • சேர்த்தப்பிறகு பாயாசத்தை நன்றாக கிளற வேண்டும்.
  • அவ்ளோதாங்க இந்த சுவையான அரிசி பாயாசம் ரெடி.இந்த பதிவில் கூறியுள்ள அரிசி பாயாசம் டிப்ஸை எல்லாரும் படித்து கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க..!

0 Reviews

Most Popular

தேங்காய் கேக் செய்யும் எளிய முறை!

சமையலறை பகுதியில் தேங்காயை வைத்து தேங்காய் கேக் செய்வது எப்படி? பற்றித்தான் இந்த பகுதில் நாம் பார்க்க போகிறோம். இந்த ரெசிபி மிகவும் சுவையுள்ளதாகவும்,சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடியதாக...

நீருடன் எலுமிச்சையை கொதிக்க வைத்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!

உங்களுக்கு வயிற்று கோளாறு இருக்கும்போது உங்கள் அம்மா உங்களுக்கு ஒரு டம்ளர் எலுமிச்சை சாறு பரிந்துரைப்பதை கவனித்திருக்கலாம். வைட்டமின் சி அதிகமாக உள்ள எலுமிச்சை நீர், உங்கள் செரிமானத்தை மேம்படுத்துதல் என்று வரும் போது...

இரவில் உணவு உண்டால் உடல் பருமன் அதிகாரிக்குமா?

மற்ற நேரங்களை விட காலை தான் நம் மெட்டபாலிசம் அதிகமாக வேலை செய்யும்.அதிலும் முக்கியமாக இரவு நேரத்தில் சாப்பிடுவது நிச்சியம் உடலை பருமன் அதிகாரிக்கச் செய்யும். காலையில் உங்கள் மெட்டபாலிசம் அதிகமாக செயல்படுகிறது இரவில்...

நாப்கின் பயன்படுத்தும் போது இது போன்ற தவறுகளை செய்யாதீர்கள்: நோய்த்தொற்றை உண்டாக்குமாம்!

பொதுவாக பெண்கள் மாதவிடாய் நாட்களில் சுத்தமாக இருப்பது அவசியமானது ஆகும். குறிப்பாக இந்தசமயங்களில் பயன்படுத்தும் நாப்கின் குறித்த விழிப்புணர்வு எல்லா பெண்களிடம் இருக்க வேண்டும். நாப்கின் வாங்குவது முதல் பயன்படுத்தும் முறை வரை இது குறித்த...

Recent Comments