28.2 C
Jaffna
Saturday, October 24, 2020
Home Lifestyle Home Garden தேனின் இரகசியங்களும் அதன் மருத்துவ குணங்களும்!

தேனின் இரகசியங்களும் அதன் மருத்துவ குணங்களும்!

ஒரு பவுண்டு தேன் சேகரிக்க தேனீக்கள் இருபது லட்சம் பூக்களிலிருந்து தேனை சேகரிக்க வேண்டும்.

சிறுபூச்சி இனத்தைச் சேர்ந்த இந்த தேனீக்கள் ஆண்டுக்கு 1 லட்சம் கி.மீ தூரம் பயணம் செய்து தன்னுடைய உணவுத் தேவைக்காக பூக்களில் இருந்து அவை தேனை எடுக்கின்றன. ஒரு பவுண்டு தேன் தயாரிக்க ஒரு தேனீ சுமார் 14 லட்சம் கிலோ மீட்டர் பறக்க வேண்டும்.

அதாவது உலகம் முழுவதும் மூன்று முறை சுற்றுவதற்கு சமம். ஒரு தேனீ தன் வாழ்நாள் முழுவதும் ஒன்றரை தேக்கரண்டி தேனை மட்டுமே சேகரிக்கும்.

ஒரு தேனீ ஒரு முறை தேன் தயாரிக்க 50 முதல் 100 பூக்கள் வரை செல்கிறது. மே 20 உலக தேனீக்கள் தினமாக கொண்டாடப்படுகிறது.

மனிதன் 8000 வருடங்களுக்கு முன் தேனைக் கண்டு பிடித்ததோடு நில்லாமல் அதை உபயோகப்படுத்துவதையும் ஆரம்பித்து இன்று வரை அதை நிறுத்த வில்லை.

தேன் கிரேக்கத்திலும், எகிப்திலும் அதிகமாக பயன்படுத்தப்பட்டது. பின்னர் ஆயுர்வேதத்திலும், சீன பாரம்பரிய மருத்துவத்திலும் முக்கிய பொருளாக சேர்க்கப்பட்டது.

இயற்கையாகவே சத்தும் சுவையும் உள்ள உணவு தேன். தேனில் வைட்டமின் B2,B6 H(biotin), K மற்றும் சிட்ரிக் அமிலம், டார்டாரிக் அமிலம், அக்ஸாலிக் அமிலம், குளுக்கோஸ், பாஸ்பரஸ், கந்தகம், இரும்புச்சத்து, உப்புச்சத்து, மக்னீசியம், கால்சியம், அயோடின், பொட்டாசியம், குளோரின் போன்ற அனைத்து சத்துக்களும் நிறைந்துள்ளன.

தேன் உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். அந்த ஆரோக்கியமான உணவுப் பொருளை நீங்கள் உண்ணும் விதம் மற்றும் எவ்வளவு சாப்பிடுகிறீர்கள் என்பதை பொறுத்து உடலுக்கு வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது.

ஆரோக்கியமாக இருக்க ஒரு உணவு உங்களுக்கு உதவுமானால் நாம் உபயோகிக்கும் முறையை பொறுத்து அது உங்களை நோய்வாய்ப்படுத்தவும் செய்யும் . ஆரோக்கியமான உடல் இருக்க வேண்டுமென்றால் ஒருவர் ஆரோக்கியமான உணவை உண்ண வேண்டும்.

தேன் மூலம் பெரும்பாலான நோய்களை குணப்படுத்த முடியும். பித்தப்பை மற்றும் ஈரல் நோய்கள் அனைத்திற்கும் மருந்தாக உள்ளது.

தினமும் வெறும் வயிற்றில் காலை அல்லது இரவு நேரத்தில் உணவு உண்ணும் முன் சுத்தமான தேனை ஒன்று முதல் 3 தேக்காரண்டி எடுத்து கொண்டு ஆறிய சுடுநீருடன் கலந்து குடித்து வந்தால் இரைப்பை அழற்சி, ஈரல், வயிற்று புண், பித்தப்பை நோய்கள் குணமாகும். எலுமிச்சை பழம் சாறுடன் தேனை கலந்து குடித்தால் குமட்டல், வாந்தி மற்றும் தலைவலி சரியாகும்.

நம் சித்த, ஆயுர்வேத மருத்துவ முறைகள் தொட்டு, சீனா, ரஷியா, ஆப்பிரிக்கா, தென்அமெரிக்க நாடுகள் உட்பட உலகின் வழக்கில் இருக்கும் அனைத்து பாரம்பரிய மருத்துவ முறைகளிலும், தேனுக்கு ஒரு முக்கிய இடமுண்டு.

உடல் எடை குறைப்பு

தேன் சாப்பிடுவது நமது உடலுக்கு வலிமையைக் கொடுக்கும். சூடு தண்ணீரில் தேனை கலந்து தினந்தோறும் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடல் எடை குறைந்து அழகாக இருக்கலாம்.

வாந்தி, சளி மற்றும் தலைவலி

தேன் மற்றும் லெமன் ஜூஸ் ஆகியவற்றை கலந்து குடித்தால் வாந்தி, சளி மற்றும் தலைவலிக்கு ஒரு நல்ல தீர்வாக இருக்கும்.

கண்பார்வை

தேனுடன் வெங்காயச் சாற்றை கலந்து குடித்தால் கண்பார்வை தெளிவு பெரும். மேலும், பலவகையான கண் பிரச்சனைகளில் இருந்து தப்பிக்கலாம்.

ஆஸ்துமா

தேன், பால் மற்றும் முட்டை ஆகியவற்றை கலந்து குடித்து வந்தால் ஆஸ்துமாவில் இருந்து விடுபடலாம்.

Most Popular

ட்ரம்ப்பிற்கு சீனாவில் வங்கி கணக்கு!!!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு சீனாவில் வங்கி கணக்கு உள்ள தகவல் இன்று வெளிவந்துள்ளது. அவரது வருமான வரி செலுத்தும் முறைமையூடாக இந்த விடயம் தெரியவந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன. ஆட்சி அமைத்த காலத்திலிருந்து சீனாவுக்கு...

Bank account for Trump in China !!!

US President Donald Trump has a bank account in China released today. According to international reports, the matter came to light through his income tax...

Three jailed in Batticaloa!

Three persons involved in child abuse have been sentenced to life imprisonment in Batticaloa today. Judge M.Y.M.Issadeen has sentenced a man (64) to 09 years...

மட்டக்களப்பில் மூவருக்கு கடூழிய சிறை!

இன்று மட்டக்களப்பில் சிறுவர் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட மூவருக்கு கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 2011ம் ஆண்டு மட்டக்களப்பு, பனிக்கையடி பிரதேசத்தில் 06 வயது சிறுமியை கடத்திச்சென்று துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியவருக்கு(வயது 64) 09 வருட கடூழிய சிறைத்தண்டனைக்கு...

Recent Comments