யாழ்ப்பாணத்தில் முதியவர் பலி!

0

யாழ்ப்பாணம் கொழும்புத்துறை பிரதான வீதியின் கடற்கரை சந்தி பகுதியில் இடம்பெற்ற வீதிவிபத்தில் காயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த முதியவர் நேற்று(11.10.2020) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாணம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

திருநெல்வேலி, கலாசாலை வீதி பகுதியினை சேர்ந்த செல்லர் சிவனேசலிங்கம் (வயது 60) என்ற 5 பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்தவராவர் .

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது யாதெனில், கடந்த 22ம் திகதி குறித்த முதியவர் தனது மகனுடன் யாழ்ப்பாணம் கொழும்புத்துறை பிரதான வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளாகியிருந்தார்.

தலையில் பலத்த காயமடைந்த முதியவரை வீதியால் சென்றவர்களினால் காப்பாற்றப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சிகிச்சை பெற்றுவந்த முதியவர் நேற்று பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இறப்பு விசாரணைகளை வைத்தியசாலையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டதையடுத்து, உடற்கூற்று பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.