இலங்கையில் நேற்றைய தினம் வரை கொரோனா நிலவரம் !!

0
இலங்கையில் இன்றையதினம் புதிதாக 124 கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

இதனையடுத்து கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 4752 ஆக உயர்வடைந்துள்ளது.

அதேவேளை 3307 பேர் நோயிலிருந்து விடுபட்டுள்ளதுடன், தற்போது 1428 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றையதினம் கண்டுபிடிக்கப்பட்ட 124 பேரில் 121 பேர் மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையை சேர்ந்தவர்களாவர்.

இவர்களில் 87 பேர் ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றுவதுடன் 24 பேர் அவர்களின் நெருங்கிய உறவினர்களாவர்.

மேலும் மூவர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களாவர்.

அதில் ஒருவர் ஓமான் நாட்டிலிருந்தும் மற்றைய இருவர் குவைத் நாட்டிலிருந்தும் வருகை தந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.