கொரோனா தடுப்பு பற்றி கருத்து தெரிவித்த அரசியல் வாரிசு!

0

மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பு இல்லாத வகையில் கொவிட்-19 வைரசை கட்டுப்படுத்தும் வேலைத் திட்டத்தை முன்னெடுப்பது அரசாங்கத்தின் நோக்கம் இவ்வாறு விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மேலும் இதற்காக பொது மக்கள் சுகாதாரப் பிரிவினரின் ஆலோசனைகளையும், வழிகாட்டுதல்களையும் முறையாக பின்பற்றுவது அவசியம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அம்பாந்தோட்டை மாவட்ட அரசாங்க அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுடன் நேற்று முன்தினம்(10.10.2020) நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போதே அமைச்சர் இதனை தெரிவித்திருந்தார்.

குறித்த பேச்சுவார்த்தையில் கொவிட் 19 நெருக்கடி நிலையில் அதனை எதிர்கொள்வதற்கு அம்பாந்தோட்டை மாவட்டம் தயாராக வேண்டிய முறை பற்றியும் ஆராயப்பட்டது.