மினுவாங்கொடையில் மேலும் 51 பேருக்கு கொரோனா!

0

மினுவாங்கொடை கொத்தணியில் மேலும் 51 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அதாவது, மினுவாங்கொடை பிரெண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிந்த 15 பேருக்கும் அவர்களுடன் பழகிய சுமார் 36 பேருக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, மினுவாங்கொடை கொத்தணியில் இதுவரை 1,397 பேர் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.