இலங்கையை அரேபியாவாக மாற்றுவோம் வாருங்கள் என அச்சிடப்பட்ட சஞ்சிகைகள் மிகிந்தலையில் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது, இலங்கையை அரேபியாவாக மாற்றுவோம் வாருங்கள் என்ற தலைப்பில் மிகிந்தலையில் உள்ள அச்சகம் ஒன்றில் சஞ்சிகைகள் அச்சிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து கிடைத்த தகவல்கள் வெளியாகியதையடுத்து காவல்துறையினர், அந்த அச்சகத்திற்கு சென்று சஞ்சிகைகளை கைப்பற்றியுள்ளனர்.

மேலும் சம்பவம் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அனுராதபுரம் – கஹட்டகஸ்திகிலிய கோன்வெவ பிரதேசத்தில் இயங்கும் அரபு பாடசாலை ஒன்றே இவ்வாறு சஞ்சிகைகளை அச்சடிக்க வழங்கியுள்ளது எனவும்,

குறித்த அரபு பாடசாலையில் நடைபெறவிருந்த ஆண்டு விழாவுக்காகவே இந்த சஞ்சிகை அச்சிடப்பட்டுள்ளதாகவும் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

காவல்துறையினர் இந்த சஞ்சிகைகளை கைப்பற்றியதை தொடர்ந்து குறித்த அரபு பாடசாலைகளின் ஆண்டு விழாவை நடத்துவதை நிறுத்த தீர்மானித்துள்ளனர்.