முல்லைத்தீவு மாவட்டத்தின் முறிப்பு பகுதியில் சட்டவிரோதமாக தேக்கு மரங்கள் அறுக்கப்பட்டு இரகசியமாக இடம்பெறும் திருட்டு தொடர்பில் உண்மைத்தன்மையினை வெளிப்படுத்த அங்கு சென்ற ஊடகவியலாளர்கள் மீது சட்டவிரோத மரக்கடத்தல் கும்பல் தாக்குதலை நடத்தியுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, முறிப்பு பகுதியில் தொடர்ச்சியாக காடழிப்பு மற்றும் தேக்கு மரங்கள் சட்டவிரோதமான முறையில் கடத்தப்படுவதாக மக்கள் தெரிவித்து வந்துள்ளனர்.

இதனைச் செய்ய சட்டவிரோதமாக ஒரு கும்பலே இயங்கிவருக்கிறமையினை அறிந்த முல்லைத்தீவு மாவட்டத்தின் முதன்மை ஊடகவியலாளர்கள் இருவர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

இதனையடுத்தே ச.தவசீலன்,மற்றும் க.குமணன் என்ற அந்த 2 ஊடகவியலாளர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.