நேபாளத்தின் முக்கிய அமைச்சருக்கு கொரோனா தொற்று!!!

0

நேபாளத்தில் சுற்றுலாவை ஊக்குவிப்பதற்காக கொரோனாவில் இருந்து நாடு விடுபட்டு விட்டதாக அறிவித்திருந்த அந்நாட்டின் சுற்றுலாத்துறை அமைச்சர் யோகேஷ் பட்டராய்க்கே கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தென்னாசிய நாடுகளில் ஒன்றான நேபாளத்தில் இதுவரை 100,000 க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதோடு சுமார் 2,059 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதனையடுத்து வைரஸ் பாதிப்புகளை கட்டுப்படுத்த நேபாள அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தலால் பாதிக்கப்பட்டிருந்த சுற்றுலாவை மேம்படுத்த அந்நாட்டின் சுற்றுலாத்துறை அமைச்சர் யோகேஷ் பட்டராய் அவர்களும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தார்.

மேலும் இவர் கொரோனாவிலிருந்து நேபாளம் மீண்டுவிட்டதாக அறிவிக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்த நிலையில் அவருக்கே தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.