முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் சகோதரர் ரியாஜ் பதியுதீனின் விடுதலை தொடர்பான அனைத்து விசாரணைக் கோப்புகளுடனும் நேற்று (12.10.2020) முன்னிலையாகுமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து, ரியாஜ் பதியுதீனை விடுவிப்பதற்காக வழங்கப்பட்ட குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரின் பரிந்துரை, நீதியல்ல எனவும், மேலதிக விசாரணையை மேற்கொள்ளுமாறும் சட்ட மாஅதிபர் தெரிவித்துள்ளார்.

சட்ட மாஅதிபரின் உரிய ஆலோசனையைப் பெறாமல் CIDயில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ரியாஜ் பதியுதீனை விடுதலை செய்தமை தொடர்பில் விளக்கமளிக்கும் பொருட்டே குறித்த அதிகாரிகளுக்கு நேற்றைய தினம் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.