வைத்தியர்களையும் விட்டுவைக்காத கொரோனா!!!

0

இலங்கையில் கொரோனாவின் இரண்டாவது அலை நடந்துவருகின்றமை யாவரும் அறிந்ததே.

இந்நிலையில் கொரோனாவின் பிடியில் 3 வைத்தியர்கள் சிக்கியுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தற்போது தெரிவித்துள்ளார்.

கேகாலை வைத்தியாசாலையில் பணியாற்றும் 3 வைத்தியர்களுக்கே கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

மேலும் பல வைத்தியர்களுக்கு PCR பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.