உயர்தர பரீட்சையில் ஆள்மாறாட்டம்! ஒருவர் கைது !!

0

திருகோணமலை – சம்பூர் காவல்துறைப்பிரிவிற்குட்பட்ட சேனையூர் மத்திய கல்லூரியில் வெளிவாரியாக பரீட்சை எழுத வருகைதந்த ஒருவர் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் சம்பூர் காவல்துறையினரால் நேற்று கைதுசெய்யப்பட்டார்.

வெருகல் – மாவடிச்சேனை பகுதியைச் சேர்ந்த 21 வயதுடையவரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அவரை இன்றைய தினம் ​(14.10.2020) மூதூர் மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.