கொழும்பு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு PCR பரிசோதனை!!!

0

கொழும்பிலுள்ள அனைத்து சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் இன்று (14.10.1010) PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

குறித்த பரிசோதனை நடவடிக்கைகள் சிறைச்சாலை வைத்தியசாலைகளில் முன்னெடுக்கப்படவுள்ளன.

அதாவது கொழும்பு மகசின் சிறைச்சாலை, வெலிக்கடை சிறைச்சாலை ஆகியவற்றின் அதிகாரிகள் மற்றும் சிறைச்சாலை தலைமையகத்தின் அதிகாரிகளுக்கு இன்று PCR  பரிசோதனைகள் இடம்பெறவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் கட்டுப்பாட்டு ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், கைதிகளின் பாதுகாப்பு தொடர்பில் அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.