பல்கலைக்கழகங்களில் PCR பரிசோதனைகளை புதிதாக முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் செயலாளரினால் எழுத்து மூலம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

இந்த கோரிக்கை தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், அனைத்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுக்கும் அறிவித்த நிலையில் அனைவரும் அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க குறிப்பிட்டுள்ளார்.

இதனடிப்படையில், இன்றுமுதல் (15.10.2020) ஶ்ரீஜயவர்தனபுர, கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பல்கலைக்கழகங்களில் PCR பரிசோனைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.