மினுவாங்கொடை கொரோனா கொத்தணியின் மேலும் 130 பேருக்கு நேற்று (14.10.2020) தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

ஆனால் இவர்களில் பெரும்பாலானோர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து கொரோனா கொத்தணியில் தொற்று அடையாளம் காணப்பட்டோரின் எண்ணிக்கை 1,721 ஆக அதிகரித்துள்ளது.

இதனையடுத்து இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,170 ஆக அதிகரித்துள்ளது.

அதேவேளை கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டோரில் 3,357 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.