பாடசாலை மாணவர்களுக்கான சீருடைகளை எதிர்வரும் டிசம்பர் 31ம் திகதிக்கு முன்னதாக அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இம்முறை பாடசாலை சீருடைகள் விநியோகிக்கும் நடவடிக்கைகள் 4 அரச நிறுவனங்களின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

மேலும் இந்த முறை பாடசாலை மாணவர்களுக்காக 11,000 மில்லியன் மீற்றர் துணி விநியோகிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.