கொரோனா தொற்று பரவும் வேகம் அதிகரித்து செல்வதை தொடர்ந்து பாரிஸ் உட்பட சுமார் 8 நகரங்களில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதி இமானுவேல் மெக்ரோன் (Emmanuel Macron) அறிவித்துள்ளார்.

இந்த ஊரடங்கு சட்டமானது இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை அமுலில் இருக்கும் என பிரன்ஸ் அரசு தெரிவித்துள்ளது.

இந்த ஊரடங்கு சட்டத்தை எதிர்வரும் சனிக்கிழமை முதல் 4 வாரங்களுக்கு அமுல்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமன்றி பிரான்ஸில் சுகாதார அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, வைரஸ் பரவும் வகையில் மக்கள் ஒன்றுகூடும் ஹோட்டல்கள், உணவகங்களை உரிய காலத்திற்கு முன்னர் மூடுமாறு ஜேர்மன் அரசு அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த ஏப்ரல் மாதத்தின் பின் நாளொன்றில் 5,000 இற்கும் மேற்பட்ட நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து ஜேர்மன்  அரசு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.

இதேபோன்று, நெதர்லாந்தை ஒரு மாதத்திற்கு பகுதியளவில் முடக்குவதற்கு அந்நாட்டு அரசும் தீர்மானித்துள்ளது.