நாடளாவிய ரீதியில் ஊரடங்கு அமுல்படுத்துவதற்கான எவ்வித திட்டமும் தற்போது இல்லை என காவல்துறையின் ஊடகப் பேச்சாளர், பிரதி காவல்துறை மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

கம்பஹா மாவட்டத்தில் கட்டுநாயக்க காவல்துறை பிரிவு உள்ளடங்களாக சுமார் 19 காவல்துறை பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலிலுள்ளதாக அவர் சுட்டிக்காட்டிய போதே இதனை தெரிவித்திருந்தார்.