பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தெரிவுக்குழு தலைவர் பொறுப்பிலிருந்து மிஸ்பா வுல் ஹக் (Misbah-ul-Haq) விலகியுள்ளார்.

ஆயினும், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக தாம் தொடர்ந்தும் செயற்படவுள்ளதாகவும் மிஸ்பா வுல் ஹக் அறிவித்துள்ளார்

முன்னாள் தலைவரான மிஸ்பா வுல் ஹக் கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தெரிவுக்குழு தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் பிரதான பயிற்றுநர் மற்றும் தெரிவுக்குழு தலைவர் உள்ளிட்ட இரு பதவிகளை வகிப்பதில் தான் சிக்கல்களை எதிர்நோக்குவதாக கூறியுள்ள மிஸ்பா வுல் ஹக்,

அதனால் தெரிவுக்குழு தலைவர் பொறுப்பிலிருந்து விலக தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து எதிர்வரும் டிசம்பர் மாதம் முதலாம் திகதி புதிய தெரிவுக்குழு தலைவர் பெயரிடப்படவுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எவ்வாறாயினும், புதிய தெரிவுக்குழு தலைவர் பெயரிடப்படும் வரையில் பாகிஸ்தான் அணியின் தெரிவுக்குழு தலைவராக மிஸ்பா வுல் ஹக் செயற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.