கொவிட் 19 பரவல் அதிகரித்துள்ளதால் எதிர்வரும் 31ம் திகதிவரை அனைத்து திரையரங்குகளையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சு வழங்கியுள்ள ஆலோசனைகளுக்கமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய திரைப்பட கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜயந்த தர்மதாச அறிவித்துள்ளார்.