சுற்றாடலை அழிப்பவர்களுக்கு பிரத்தியேக பிரிவு உருவாக்க திட்டம்!

0

திட்டமிட்ட சுற்றாடல் அழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களை சுற்றிவளைப்பதற்காக பிரத்தியேக பிரிவு ஒன்றினை ஸ்தாபிக்க சுற்றாடல் அமைச்சு தீர்மானித்துள்ளது.

இராணுவம் மற்றும் காவல்துறையின் உயர்மட்ட அதிகாரிகள் இருவரின் தலைமையில் இந்த பிரிவு உருவாக்கப்படவுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர நேற்று (15.10.2020) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.

சுற்றாடல் அழிப்பு முன்னெடுக்கப்படும் போது உடனடியாக அதனை சுற்றிவளைக்கும் நடவடிக்கையில் குறித்த பிரிவு ஈடுபடவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, 103 ஆறுகளை பாதுகாக்கும் நோக்கில் புதிய வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர கூறினார்.

மேலும் சுற்றாடலுக்கு ஏற்படுகின்ற பாதிப்புகள் தொடர்பிலான முறைப்பாடுகளை செய்வதற்காக சுற்றாடல் அமைச்சு புதிய அவசர அழைப்பு இலக்கங்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

சுற்றாடல் அமைச்சின் 1991,      மத்திய சுற்றாடல் அதிகார சபையின் 1981,                                  புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின் 1921      ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பு மேற்கொண்டு முறைப்பாடுகளை முன்வைக்க முடியும் எனவும் மஹிந்த அமரவீர கூறினார்.