மினுவாங்கொடை கொத்தணியில் மேலும் 49 பேருக்கு கொரோனா!

0

மினுவாங்கொடை கொத்தணியில் மேலும் 49 பேருக்கு இன்று(16.10.2020) கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இவர்களில் 13 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் அடையாளம் காணப்பட்டதாக கொவிட் 19 ஒழிப்பிற்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

ஏனைய 36 பேரும் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களாவார்.

இதனையடுத்து மினுவாங்கொடை கொரோனா கொத்தணியில் அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,770 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இலங்கையில் பதிவான கொரோனா நோயாளர்களின் மொத்த எண்ணிக்கை 5,219 ஆக உயர்ந்துள்ளது.

அத்துடன் கொரோனா தொற்றுக்குள்ளான 1,826 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள அனைத்து பகுதிகளிலும் நாளை(17.10.2020) காலை 8 மணி தொடக்கம் இரவு 10 மணி வரை உணவுப்பொருள் விற்பனை நிலையங்கள் மற்றும் மருந்தகங்கள் திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வவுனியா, திருகோணமலை, கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் இருந்து கொரோனா நோயாளர்கள் பதிவாகவில்லை.

இந்நிலையில் தொற்றுக்குள்ளானவர்களில் அதிகமானவர்கள் கொழும்பு மாவட்டத்திலேயே சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.