“20வது திருத்தம் தான்தோன்றித்தனமான நிறைவேற்றதிகாரத்தை வழங்கும்!”

0

​20வது திருத்தம் தான்தோன்றித்தனமான நிறைவேற்றதிகாரத்தை வழங்கும்!

தேரர்கள் சிலர் கூட்டாக இணைந்து 20வது திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஸவிற்கு அனுப்பி வைத்த கடிதத்தில் மேற்படி வலியுறுத்தப்பட்டுள்ளது.

அதாவது, 20வது திருத்தம் ஸ்திரமற்ற அரச பொறிமுறையை உருவாக்கும் என தெரிவித்துள்ள தேரர்கள்,

20வது திருத்தம் தான்தோன்றித்தனமான நிறைவேற்றதிகாரத்தை வழங்கும் என்பதுடன், அரசியலமைப்பு பேரவை மற்றும் நீதித்துறையை அது கட்டுப்படுத்தும் நிலை உருவாகும் எனவும் தேரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

முருத்தெட்டுவே ஆனந்த தேரர், பெங்கமுவே நாலக்க தேரர் மற்றும் எல்லே குணவங்ச தேரர் ஆகிய தேரர்களே இந்த கடிதத்தை எழுதியுள்ளனர்.

மேலும் இதன் காரணமாக பலவீனமான அமைச்சரவை ஸ்தாபிக்கப்படும் எனவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசியலமைப்பிற்கு முரணாக ஜனாதிபதி செயற்படும் போது, அது குறித்து நீதிமன்றத்தை நாடுவதற்கு பொதுமக்களுக்குள்ள உரிமையும் 20வது திருத்தத்தினூடாக நீக்கப்படுவதாக தேரர்களின் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தத்தில் சட்டவாட்சிக்கு எதிராக ஸ்திரமற்ற அரச பொறிமுறையை உருவாக்கும் வகையில், 20வது அரசியலமைப்பு திருத்தம் காணப்படுவதாகவும்,

நாட்டில் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள 20வது அரசியலமைப்பு திருத்தத்தை அவ்வாறே நிறைவேற்றுவது தொடர்பில் மீள்பரிசீலனை வேண்டும் எனவும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேற்கொண்டு குறைந்தபட்சம் தங்களால் பரிந்துரைக்கப்படும் திருத்தங்களையாவது அதில் உள்வாங்குமாறு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஸவிடம் தேரர்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.