மட்டக்களப்பு – பிள்ளையாரடி பறவைகள் சரணாலயத்தில் பரவிய தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது இன்று(16.10.2020) முற்பகல் 11.30 அளவில் சரணாலயத்தில் தீ பரவியுள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த மட்டக்களப்பு மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினர் பகிரங்க பிரயத்தனங்களுக்கு மத்தியில் தீயை வெற்றிகரமாக கட்டுப்படுத்தியுள்ளனர்.

எனினும் பறவைகள் சரணாலயத்தின் சுமார் 4 ஏக்கர் பகுதி தீக்கிரையாகியுள்ளதாக தீயணைப்பு பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை பறவைகள் சரணாலயத்தில் தீ பரவியமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என கூறப்படுகிறது.