மாகாண ஆளுநர் குறித்து கவலை வெளியிட்ட சாணக்கியன்!!!

0

அரச தேவைகளுக்காக அரச அதிபர்களை இடமாற்றம் செய்வதும் நியமனம் செய்வதும் தவறான அரசியல் கலாசாரத்தை உருவாக்கும்

இவ்வாறு மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

மேலும் நாங்கள் தான் அரசாங்க அதிபரை கொண்டுவந்தோம் என சொன்னவர்கள் தற்போது அரச அதிபர் ஒருவருக்கு அநீதி நடக்கும் போது எங்கபோய் உள்ளனர்.

அவர்களது எஜமானர்களின் தவறான முடிவையும் தலையாட்டி பொம்மைகளாக இருந்து ஆதரிப்பது கவலையளிக்கிறது என தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றிலேயே இதனை குறிப்பிட்டுள்ள அவர் தொடர்ந்து,

அரசாங்க அதிபராக கலாமதி பத்மராஜா நியமிக்கப்பட்டு பத்து மாதங்கள் தான் ஆகின்றது.

அதற்குள் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த இடமாற்றத்தை நான் கலாமதி பத்மராஜாவின் இடமாற்றமாக பார்க்கவில்லை.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரின் இடமாற்றமாகவே பார்க்கின்றேன்.

நாம் எப்போதும் அரச அதிகாரிகளின் கரங்களை பலப்படுத்த வேண்டும்.

அரச அதிகாரிகள் சரியான முறையில் செயற்படும்போது அவர்களுக்கு அழுத்தங்கள் உருவாவதும் இடமாற்றங்களும் வழங்கப்படுகின்றன.

இதனாலேயே அரச அதிகாரிகள் தங்களது கடமையினை மேற்கொள்ள தயங்குகின்றனர்.

ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட அவர் கிழக்கு மாகாணத்தின் குட்டி ஜனாதிபதியாக இருந்து தன்னுடைய வேலைத்திட்டத்தை திணிக்கின்றார்.

மேலும் எல்லோருடைய கருத்தையும் உள்வாங்கி சரியான முறையில் செயற்படுகின்றவரே ஆளுநராக இருக்க வேண்டும்.

மாறாக தான் எடுக்கும் முடிவுகள் அனைத்தும் சரி என நினைக்கின்றவர் அதற்கு பொருத்தமற்றவர் என நீண்டதாக ஒரு உரையை வழங்கியுள்ளார்.