வவுனியா வடக்கு, வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்திற்கான வழிபாட்டுத் தடைக்கு எதிராக மிக விரைவில் அடிப்படை உரிமை மீறல் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்டத்தின் தமிழரசுக்கட்சியின் தலைமை அலுவலகத்தில், ஆலய வழிபாட்டிற்கு காவல்துறையினர் தடைவிதித்துள்ளமை தொடர்பில் ஆலய நிர்வாகத்தினருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் இது குறித்து பேசிய அவர்,                                              அண்மை நாட்களாக வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு அடியவர்கள் சென்று வழிபடுவதற்கு நெடுங்கேணி காவல்துறையினர் தடைவிதித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஆலயத்தில் பூசை செய்வதற்கு விதிக்கப்பட்டிருக்கின்ற தடை தொடர்பாக அந்த ஆலயத்தினுடைய, பூர்வீகம், வரலாறு இவற்றை எல்லாம் வைத்து மக்கள் அங்கே வணங்குவதற்குரிய உரித்து அவர்களுக்கு இருக்கின்றது.

அதை எவரும் தடுக்க முடியாது என்ற ரீதியிலே அடிப்படை உரிமை மீறல் வழக்கு ஒன்றினை உடனடியாகத் தாக்கல் செய்வதாக இருக்கின்றோம் என்று குறிப்பிட்டுள்ளார்.