கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ள போதிலும் எதிர்வரும் நாட்கள் மிகவும் முக்கியமான தீர்மானமிக்கவை என இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

மேலும் கொரோனா தொற்றுக்குள்ளாகாமல் தங்களை தாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டிய அவசியம் மக்களுக்கு உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கொரோனா தொற்றாளர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு தேவையான வைத்தியசாலைகள் மற்றும் தனிமைப்படுத்தல் நிலையங்கள் அவசியமான அளவிற்கு விரிவுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், எதிர்வரும் நாட்களில் அதன் அவசியம் அதிகரித்தால் அதனை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும்,

ஐ.டி.எச் வைத்தியசாலையில் நோயாளிகளின் எண்ணிக்கை வரம்பை மீறியுள்ளமையினால் பல வைத்தியசாலைகளில் சிகிச்சை வழங்குவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து நாட்டின் தற்போதைய நிலைமை எதிர்வரும் வாரங்களுக்குள் சீராகுமா? என இராணுவத் தளபதியிடம் வினவிய போது, இது தொடர்பில் ஒன்றும் குறிப்பிடமுடியாதென அவர் தெரிவித்துள்ளார்.