உலகளவில் வளி மாசடைவதற்கு இந்தியா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளே காரணமாக இருக்கின்றன      இவ்வாறு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், இதற்கு அந்நாடுகள் நச்சு வாயுக்களை அதிகமாக வெளியிடுவதே காரணம் என தெரிவித்துள்ளார்.

வட கரோலினாவில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் பேசிய ட்ரம்ப், அமெரிக்காவைப் பொறுத்தவரை குறைந்தளவுதான் காற்றில் மாசுகள் கலக்கப்படுகின்றன.

மேலும் எனது நிர்வாகம் சுற்றுச்சூழலைப் பாதுகாத்த அதேசமயம், எரிசக்தி உற்பத்தியிலும் தன்னிறைவு அடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.