அடுத்த கட்டச் செயற்பாடுகளை ஆராயும் நோக்கில் தமிழ் கட்சிகளின் தலைவர்களுடனான கூட்டம் ஒன்று நாளைய தினம் யாழில் இடம்பெறவுள்ளது.

அதற்கான பொது அழைப்பை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா இன்று விடுத்துள்ளார்.

இது குறித்து ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட அவர்,            கடந்த நாட்களில் உண்ணாவிரதப் போராட்டம், ஹர்த்தால் என்பவற்றை இணைந்து நடத்தியிருக்கின்றோம்.

தமிழ் மக்களுடைய உரித்துக்கள், அதற்காக என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஆராய்ந்து நாம் சில முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கின்றது.

மேலும் 20வது திருத்தச் சட்டம்,    புதிய அரசியலமைப்பு உருவாக்கம் என்பன குறித்து மற்றைய கட்சிகளின் கருத்துக்களை அறிய வேண்டியுள்ளது என தெரிவித்துள்ளார்.

இதேவேளை எதிர்காலத்தில் இணைந்து செயற்படுவதற்கான வேலைத் திட்டங்கள் தொடர்பாக இந்தச் சந்திப்பில் ஆராயப்படும் என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.