அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரான ரிஷாட் பதியூதீனை கைதுசெய்வதற்கு முன்னெடுக்கப்படும் முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து புத்தளம் பாலாவி மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர்.

நேற்றையதினம்(17.10.2020) தமது ஜூம்ஆத் தொழுகையினை முடித்துக் கொண்டு நபர்களுக்கிடையிலான தூரம், முகக் கவசம் ஆகிய சுகாதார நடைமுறைகளை முழுமையாக பின்பற்றி இந்த போராட்டத்தினை முனனெடுத்துள்ளனர்.

புத்தளம், பாலாவி இளைஞர் அமைப்பு உள்ளிட்ட பொதுஅமைப்புக்களின் முக்கியஸ்தர்கள் ஏற்பாடு செய்த இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம்.நியாஸ், முன்னாள் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் எம்.ஐ.இல்யாஸ் உள்ளிட்ட முக்கியஸ்தர்களும், பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

இதன்போது 20வது அரசியல் யாப்பு சீர்திருத்தம், தேர்தல் காலங்களில் அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமை என்பனவற்றுக்கும் ஆர்ப்பாட்டக்காரர்கள் எதிர்ப்புத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.