பிரபல வானொலி அறிவிப்பாளர் விபத்தில் பலி!

0

இலங்கையின் பிரபல வானொலி சேவையின் அறிவிப்பாளர் விபத்தில் உயிரிழந்துள்ளார்

பிரபாஷ்வர வித்தானகே என்ற ஊடகவியலாளரே நேற்று(16.10.2020) அதிகாலை விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

நுகேகொட, தெல்கந்த பிரதேசத்தில் வீதிக்கு அருகில் வேகமாக பயணித்த காரின் கீழ் பகுதி மதில் ஒன்றில் மோதுண்ட நிலையில் படுகாயமடைந்த அறிவிப்பாளர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து வாகனத்தை ஓட்டிய சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.