மினுவாங்கொடை கொத்தணியில் மேலும் 73 பேருக்கு தொற்று உறுதி!

0

மினுவாங்கொடை கொரோனா கொத்தணியில் மேலும் 73 பேருக்கு இன்று தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதில் தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டிருந்த இருவருடன் கொரோனா நோயாளர்களுடன் தொடர்புகளைப் பேணிய சுமார் 71 பேர் அடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதற்கமைவாக, மினுவாங்கொடை கொத்தணியில் இதுவரை 1,972 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் நாடளாவிய ரீதியில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 5,427 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் அவர்களில் 2, 019 பேர் வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெறுகின்றதுடன், தொற்றுக்குள்ளானவர்களில் 3395 பேர் இதுவரை குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.