காலியில் கொரோனா தொற்று ஆரம்பம்!

0

காலி, கித்துலன்பிட்டிய பகுதியில் இன்று(17.10.2020) ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கொழும்பு கப்பல்துறையில் பணிபுரியும் ஒருவருக்கே இவ்வாறு தொற்று உறுதிப்படுத்தப்பட்டு உள்ளதாக தென்மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சந்தன சிரிதுங்க தெரிவித்துள்ளார்.

மேலும் இது தாெடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர்,

இதுவரை மாத்தறை மற்றும் திஸ்ஸமஹாராமவை சேர்ந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அப்பகுதிகளைச் சேர்ந்த 1500 க்கும் அதிகமானோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.