S.P.B மறைவுக்கு சீனாதான் காரணம்!!! சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு.

0

திரையுலகின் பிரபல பாடகர் S.P.பாலசுப்ரமணியம் அவர்களது உயிரிழப்பிற்கு சீனா தான் காரணம் என சர்வதேச நீதிமன்றத்தில் இன்று வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலத்தின் விஜயவாடா பகுதியை சேர்ந்த சீனிவாசராவ் எனும் S.P.B ரசிகர் ஒருவரே சர்வதேச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

மேலும் அவருடைய மனுவில், கடந்த 8 மாதங்களாக கொரோனா வைரஸ் தொற்றால் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளின் பொருளாதாரம் சீர்குலைந்து விட்டதாகவும்,

கொரோனா வைரஸை உருவாக்கியதாக சீனா மீது தொடர்ச்சியான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள போதிலும் சீனா இதுவரை அதற்கு எவ்வித பதிலும் வழங்கவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளதாக இந்தியசெய்திகள் தெரிவிக்கின்றன.

அதுமட்டுமன்றி, கண்ணுக்கு புலப்படாத நுண்ணுயிரினை உலகம் முழுவதும் சீனா பரவச் செய்ததனால் மாத்திரமே பிரபல பாடகர் S.P.பாலசுப்ரமணியம் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் உயிரிழந்துள்ளனர்.

இதனால் சீனா மீது குற்றவியல் விசாரணை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என குறிப்பிட்ட நபர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.