28.2 C
Jaffna
Sunday, August 9, 2020
Home Spiritual Astrology உச்சம் பெறப்போகும் செவ்வாய்! புகழ், செல்வம், செல்வாக்கை அதிகம் பெற போகும் ராசிக்காரர் யார்?

உச்சம் பெறப்போகும் செவ்வாய்! புகழ், செல்வம், செல்வாக்கை அதிகம் பெற போகும் ராசிக்காரர் யார்?

செவ்வாய் பகவான் தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார் மார்ச் 22ஆம் தேதி செவ்வாய் பெயர்ச்சி நடக்கிறது.

ஏதிருக்கணித பஞ்சாங்கப்படி சனிபகவான் அங்கே பெயர்ச்சியாகி ஆட்சி பெற்று அமர்ந்திருக்கிறார். செவ்வாய் உச்சம் பெறப்போகிறார்.அந்தவகையில் 12 ராசியினருக்கு செவ்வாய் என்னென்ன பலன்களை கொடுக்கப் போகிறார் என்று இங்கு பார்ப்போம்.

மேஷம்

மேஷ ராசிக்கு பத்தாவது வீட்டில் உங்கள் ராசிநாதன் செவ்வாய் உச்சம் பெற்று அமரப்போகிறார். அவருடைய பார்வையும் உங்களுக்கு கிடைப்பதால் உற்சாகமாக இருப்பீங்க.

உடல் நலத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். பிசினஸ் சும்மா பிச்சிக்கிட்டு போகும் நல்ல லாபம் வரும். உடல் ஆரோக்கியம் நல்லா இருக்கும்.

தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும் நல்ல தொழில் அமையும் புதிய வேலைக்கு முயற்சி செய்யலாம் கிடைக்கும். சொத்துப்பிரச்சினை தீரும்.

விற்காமல் இருந்த நிலங்கள் லாபத்திற்கு விற்கலாம். செவ்வாய்கிழமைகளில் சுப்ரமணியரை வணங்குங்கள் நன்மைகள் நடக்கும்.

ரிஷபம்

உங்கள் ராசிக்கு 9வது வீட்டில் செவ்வாய் பகவான் அமர்வதால் தொலைதூர பயணங்கள் ஏற்படும் ஆனாலும் இப்போழுது இருக்கின்ற சூழ்நிலையில் வெளிநாடு பயணம் வேண்டாம்.

கோவில்களுக்கு ஆன்மீக பயணம் செல்வீர்கள். புதிய முயற்சிகள் வெற்றியடையும். சகோதரர்களால் பிரச்சினைகள் வந்து நீங்கும்.

அப்பாவின் கோபத்துக்கு ஆளாவீர்கள். புதியவர்கள் அறிமுகமாவார்கள். புதிய சொத்து வாங்குவீர்கள். வெள்ளிக்கிழமையில் துர்க்கைக்கு தீபம் ஏற்றி வணங்கினால் நன்மைகள் நடக்கும்.

மிதுனம்

செவ்வாய் உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் அமர்வது அத்தனை நல்ல விசயம் இல்லை. ரொம்ப கவனமாகவும் விழிப்புணர்வோடும் இருக்க வேண்டும்.

கூர்மையான பொருட்களையும் நெருப்பு, மின்சாரச் சாதனங்களைக் கவனமாகக் கையாளுங்கள்.

வண்டி வாகனங்களில் போகும் போது சின்னச் சின்ன விபத்துகள் ஏற்படும். கவனம் இல்லாமல் இருந்து விட்டு பின்னர் அய்யோ ஷாக்கடித்து விட்டதே என்று பதற வேண்டாம்.

உங்க உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. உங்கள் குடும்பத்தினரிடம் பேசும் போது கவனமாக பேசவும்.

பணம் விசயத்தில் கவனமாக இருங்கள். செவ்வாய் கிழமைகளில் கந்த சஷ்டி கவசம் படிக்கவும். விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றி வணங்கவும்.

கடகம்

இதுநாள் வரை ஆறாவது வீட்டில் குரு, கேது உடன் அமர்ந்து இருந்த செவ்வாய் பகவான் இனி 7வது வீட்டில் சனியோடு அமரப்போகிறார். உச்சம் பெற்ற செவ்வாய் உங்களுக்கு ருச்சிக யோகத்தை தரப்போகிறார்.

ரொம்ப உற்சாகமாக இருப்பீங்க. சந்தோஷங்கள் நிறைந்த காலமாக மாறப்போகிறது. உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

மாணவர்கள் தேர்வுகளை நன்றாக எதிர்கொள்வீர்கள். குடும்பத்தில் குதூகலமாக இருப்பீர்கள்.

குழந்தைகளுடன் உற்சாகமாக பொழுதை போக்குவீர்கள். கணவன் மனைவி இடையே வீண் விவாதங்களை தவிர்த்தால் போதும் அமைதி பூங்காவாக வீடு திகழும். செவ்வாய் சனியோடு அமர்வதால் உணவில் கட்டுப்பாடு அவசியம்.

சிம்மம்

ராசிக்கு 5வது வீட்டில் இருந்து 6வது வீட்டிற்கு இடம் பெயரும் செவ்வாய் உங்க ராசியை பார்க்கிறார்.

12ஆம் வீடு, ஒன்பதாம் வீடுகளின் மீது செவ்வாய் பார்வை விழுகிறது. வீடு, மனை வாங்குவீர்கள். தாய்வழியில் மதிப்பு, மரியாதை கூடும்.

நாடாளுபவர்கள், அரசு அதிகாரிகளால் ஆதாயமடைவீர்கள். கடனாகவும், கைமாற்றாகவும் காசு புரட்டி புது வீடு கட்டிக் குடிபுகுவீர்கள்.

நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். வேலைக்காக பயணம் செய்வீர்கள். குடும்பத்திலோ, வேலை செய்யும் இடத்திலோ பிரச்சினைகள் ஏற்படும் பேச்சில் கவனமாக இருங்க. அரசு போட்டி தேர்வுகள் எழுதலாம்.

கன்னி

உங்க ராசிக்கு 4வது வீட்டில் கேது குரு உடன் இருந்த செவ்வாய் இனி சனியோடு சேர்ந்து உங்கள் ராசிக்கு 5வது வீட்டில் நிற்பதால் கர்ப்பிணிப் பெண்கள் கவனமாகச் செயல்படுவது நல்லது. உஷ்ணமான உணவுகளை சாப்பிடாதீங்கள்.

மனதையும் உடலையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளுங்கள். சகோதரியின் திருமணத்தை போராடி முடிப்பீர்கள்.

சொத்து விற்பது, வாங்குவதில் வில்லங்கம் ஏதாவது இருக்கிறதா என்று சரிபார்த்துக் கொள்ளுங்கள். சின்னச் சின்ன பயணங்கள் செல்வீர்கள்.

குல தெய்வ கோவிலுக்கு சென்று வருவீர்கள். குழந்தைகளில் உடல்நலனில் அக்கறை தேவை.

துலாம்

செவ்வாய் உங்க ராசிக்கு நான்காம் வீட்டில் அமர்ந்து ருச்சிக யோகத்தை தரப்போகிறார். உங்களுக்கு ரொம்ப நன்மையை செய்வார். பண வரவு அதிகரிக்கும். வேலை, தொழிலில் லாபமும் பணி உயர்வும் ஏற்படும்.

ஆனால், வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள். தாழ்வுமனப்பான்மை நீங்கி தன்னம்பிக்கை பிறக்கும். அம்மாவிற்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும்.

சொத்து தகராறுகள் வந்து செல்லும் கவனமாக இருங்க. நடராஜரை உத்திரம் நட்சத்திரம் நாளில் சென்று வணங்குங்கள் நன்மைகள் நடைபெறும்.

விருச்சிகம்

உங்கள் ராசி அதிபதி செவ்வாய் 3வது வீட்டில் குடியேறியுள்ளதால் உடன் பிறந்தவர்களின் ஒத்துழைத்தும், நண்பர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும்.

புதிய வாய்ப்புகள் வீட்டுக்கதவை தட்டும். முயற்சி ஸ்தானமான 3ஆம் வீட்டில் செவ்வாய் நிற்பதால் தைரியமாகவும் தன்னிச்சையாகவும் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வீட்டுமனை வாங்குவீர்கள்.

தனுசு

செவ்வாய் 2ஆம் வீட்டில் சனியோடு அமரப்போவதால் சிலர் புதிய வீடு ஏன் ஊர் கூட மாற வேண்டிய நிர்பந்தம் கூட ஏற்படும்.

உறவினர்களுடன் அன்போடும், பாசத்துடனும் பழகுங்கள். பேச்சில் கவனமாக இருங்க யாரிடமும் கோபமாக பேசவேண்டாம்.

சகோதரர், சகோதரிகளிடம் விட்டுக்கொடுத்து போங்கள். வீண் விவாதங்களை தவிருங்கள். தாய்மாமன் வகையில் கருத்து வேறுபாடுகள் ஏற்படும் கவனம் தேவை.

மகரம்

செவ்வாய் உங்க ராசிக்கு 4, 11ஆம் வீட்டு அதிபதி உங்க பெர்சனாலிட்டி அதிகமாகும். சனி உங்க வீட்டில் குடியேறியுள்ள நிலையில் கூடவே செவ்வாயும் இணையப்போகிறார்.

உங்க ராசி லக்னத்தில் செவ்வாய் உச்சம் பெற்று அமரப்போவதால் உங்களுக்கு ருச்சிக யோகம் கிடைக்கிறது. பணவருமானம் வரும். வேலைப்பளுவும் அதிகமாகும்.

கல்யாண வாழ்க்கையோ காதல் வாழ்க்கையோ கவனமாக இருங்க. ரொம்ப டென்சனா இருக்காதீங்க.

உங்களுக்கு ஏதோ பெரிய நோய் இருப்பதைப் போல நீங்கள் உணருவீர்கள். அப்படி எல்லாம் எதுவும் இருக்க வாய்ப்பில்லை.

பாதிப்புகள் குறைய புற்றுள்ள கோவிலுக்கு சென்று வணங்கி வாருங்கள்.

கும்பம்

எதிர்பாராத செலவுகள் வரலாம் காரணம் விரைய ஸ்தானத்தில் செவ்வாய் சனியோடு சஞ்சரிக்கிறார்.

மறைமுக எதிரிகளால் தொல்லைகள் ஏற்படும். திடீர் வெளிநாடு வாய்ப்புகள் வரலாம் நிறைய பேர் வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்புவீர்கள்.

மன அழுத்தம் அதிகமாக இருக்கும் இதுவே உங்க மண வாழ்க்கையை பாதிக்கும். உங்க உடல் ஆரோக்கியத்தில கவனமாக இருங்கள்.

வேலையில் உற்சாகமாக இருப்பீர்கள். தொழிலில் வருமானம் அதிகமாக இருக்கும். பணத்தை முதலீடு செய்யும் முன்பாக ஒருமுறைக்கு இருமுறை யோசித்து முடிவு பண்ணுங்க.

மீனம்

ராசிக்கு லாப ஸ்தானத்தில் செவ்வாய் அமர்ந்து உள்ளதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். நண்பர்கள், உறவினர்கள் உதவி செய்வார்கள்.

தொலைதூர பயணங்கள் செல்வீர்கள். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். உங்களுடைய நிர்வாகத்திறன் அதிகரிக்கும். எதிர்பாராத பணவரவு உண்டு.

குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு பிள்ளைகளும் குடும்பத்தினரும் முக்கியத்துவம் தருவார்கள். உடன்பிறந்தவர்கள் பாசமழை பொழிவார்கள்.

0 Reviews

Most Popular

2021-ம் ஆண்டு 20 ஓவர் உலககோப்பை போட்டி எங்கு நடைபெறவுள்ளது தெரியுமா?

2021-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை போட்டியை இந்தியாவில் நடத்துவது என்று ஐ.சி.சி. கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் அக்டோபர்,நவம்பர்...

ஓய்வு தொடர்பில் டோனியின் அறிவிப்பு!

இந்திய அணியின் முன்னாள் அணித் தலைவர் டோனி தாம் எப்போது ஓய்வை அறிவிப்பேன் என்பதை சூசகமாக அப்போதெ தெரிவித்துள்ளார் என தெரியவந்துள்ளது. டோனி இந்தியாவுக்காக மீண்டும் கிரிக்கெட் விளையாடுவாரா அல்லது ஒய்வு பெறும் முடிவை...

பாடசாலைகள் ஆரம்பிப்பது தொடர்பில் கல்வியமைச்சு வெளியிட்டுள்ள செய்தி!

நாளை முதல் மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளை கட்டம் கட்டமாக ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி நாளை முதல் பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு விசேட முறைமைகள் கையாளப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். ஒரு மீற்றர் இடைவெளியை பேணி...

புதிய பிரதமராக மகிந்த ராஜபக்‌ஷ இன்று பதவியேற்பு!

புதிய அரசாங்கத்தின் பிரதமராக மகிந்த ராஜபக்‌ஷ இன்று பதவியேற்கவுள்ளார். களனி ரஜமகாவிகாரையில் இன்று காலை 8.30க்கு அவர் பதவியேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரான மகிந்த ராஜபக்‌ஷ 4வது தடவையாக பிரதமராக பதவியேற்கவுள்ளார். நடைபெற்று...

Recent Comments