27.7 C
Jaffna
Sunday, August 9, 2020
Home Spiritual Astrology துளசியும் வாஸ்துவும்

துளசியும் வாஸ்துவும்

ஜோதிடத்தில் குரு பார்க்க கோடி நன்மை என்பார்கள்!
வீட்டில் துளசி வளர்க்கக் கோடி நன்மை என்பார்கள்!

வீட்டில் துளசியை வைத்து வாங்கிவிட வாஸ்துவினால் வளம் உண்டு.துளசியை மகாலட்சுமியின் மறுவடிவமாக வைணவர்கள் எண்ணி வணங்குவார்கள்.ஏனெனில் துளசி வனத்தில்,மகாலட்சுமியின் மறுவடிவமான ஸ்ரீதேவி நாச்சியார் அவதாரம் செய்து மார்க்கண்டேய மகரிஷியிடம் வளர்ந்து மகாவிஷ்ணுவையே மணம் செய்து கொண்டவர்.எனவே திருத்துழாய்த்தளம் இந்த துளசி அவ்வளவு முக்கியமானது.சரி வாஸ்துவுக்கும் துளசிக்கும் என்ன தொடர்பு.

துளசி மருத்துவக்குணம் கொண்டது;அக்னித்தத்துவம்.உடலில் உள்ள அக்னியை அதாவது நமது உடலில் உள்ள 98.4 என்கிற சூட்டை நிலையாக வைத்திருக்க இது உதவும்.எனவே தான் துளசியை மருந்தாகப் பயன்படுத்தலாம்.அப்படியே பச்சையாகவே சாப்பிடலாம்.நல்லது ஜலதோஷம் சிறிதும் வராமல் தடுக்க இதுமிகவும் உதவும்;மற்ற சில நோய்களுக்கும் இது மருந்தாகும்.

அக்னியின் தத்துவமான துளசியை வீட்டில் வைப்பதால் மகாலட்சுமியின் அருள் கிடைக்கும்,அத்துடன் வாஸ்துவின் அக்னி மூலை சரியில்லாத வீடுகளில் இதை வைத்து பூசிப்பது நல்லது.வடகிழக்குப் பகுதியில் உள்ள திறந்த வெளியில்தான் இதை வைக்க வேண்டும்.அக்னி மூலை சரியிருப்பினும் கூட வைப்பதில் தவறில்லை.இதனுடைய காற்று வீட்டினுள் பரவினாலே கூட போதுமானது.சகல விதமான வாஸ்து குறைபாடுகளும் நீங்கிடக் கூடிய வாய்ப்புண்டு.

இப்போதெல்லாம் மணிபிலாண்ட் என்கிற ஒரு காட்டுச் செடியைத் தான் எல்லா வீடுகளிலும் ஆசையாய் வளர்க்கிறார்கள்.இதனால் ஏதாவது வாஸ்து குறைபாடு அகலுகிறதா!இல்லை.பணமாக வருகிறதா!இல்லை பின்பு அழகுக்காக வைக்கிறார்கள்.அப்படி ஒன்றும் இந்தத் துளசியை விட இது அழகானதல்ல.

இலட்சுமிகடாட்சம் என்பார்களே அது அந்த வீட்டினுள் ஏற்படும்.மருமகள் மகாலட்சுமியைப் போன்று வந்திருக்கிறார் என்று கூறுவார்கள்.அதுகூட இதை வைப்பதால் உண்டாக்கக்கூடியது.தீர்க்க சுமங்கலியாக வாழ்வாய் என வாழ்த்துவார்கள்.அவையெல்லாம் உண்டாகக் கூடியது.அவ்வளவு சக்தி வாய்ந்தது இந்தச் செடி.

ஒரு வீட்டில் தென்கிழக்கு மூலையில் வாசக்காலோ அல்லது படுக்கை அறையோ அல்லது வேறு ஒரு அறையோ பொருந்தாமல் போய்விட்டது என்று கூட இருந்தால் சிறிதும் கவலையின்றி துளசியை ஆராதிப்பதன் மூலம் அந்த விக்கினங்களை விளக்கிட முடியும்.உடலுக்குள் உபாதையைத் தடுப்பதுடன்,இதனுடைய கற்று வீட்டின் உள்ளே மோதி,நமது உடல் உள்ளேயும் பரவுவதால்,மனத்தில் இருக்கும் வலிகள் பறந்தோடி விடும்.மனத்தெளிவும் மன உறுதியும் உண்டாகும்.உற்சாகமாய் ஊருடன்,உறவுடன் உண்டு களித்து மகிழலாம்.

0 Reviews

Most Popular

2021-ம் ஆண்டு 20 ஓவர் உலககோப்பை போட்டி எங்கு நடைபெறவுள்ளது தெரியுமா?

2021-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை போட்டியை இந்தியாவில் நடத்துவது என்று ஐ.சி.சி. கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் அக்டோபர்,நவம்பர்...

ஓய்வு தொடர்பில் டோனியின் அறிவிப்பு!

இந்திய அணியின் முன்னாள் அணித் தலைவர் டோனி தாம் எப்போது ஓய்வை அறிவிப்பேன் என்பதை சூசகமாக அப்போதெ தெரிவித்துள்ளார் என தெரியவந்துள்ளது. டோனி இந்தியாவுக்காக மீண்டும் கிரிக்கெட் விளையாடுவாரா அல்லது ஒய்வு பெறும் முடிவை...

பாடசாலைகள் ஆரம்பிப்பது தொடர்பில் கல்வியமைச்சு வெளியிட்டுள்ள செய்தி!

நாளை முதல் மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளை கட்டம் கட்டமாக ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி நாளை முதல் பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு விசேட முறைமைகள் கையாளப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். ஒரு மீற்றர் இடைவெளியை பேணி...

புதிய பிரதமராக மகிந்த ராஜபக்‌ஷ இன்று பதவியேற்பு!

புதிய அரசாங்கத்தின் பிரதமராக மகிந்த ராஜபக்‌ஷ இன்று பதவியேற்கவுள்ளார். களனி ரஜமகாவிகாரையில் இன்று காலை 8.30க்கு அவர் பதவியேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரான மகிந்த ராஜபக்‌ஷ 4வது தடவையாக பிரதமராக பதவியேற்கவுள்ளார். நடைபெற்று...

Recent Comments