28.7 C
Jaffna
Thursday, July 2, 2020
Home Technology Science பூமியை நோக்கி வரும் மற்றோரு ஆபத்து!

பூமியை நோக்கி வரும் மற்றோரு ஆபத்து!

ஒரு மைல் அகலமுள்ள ஒரு சிறுகோள் பூமிக்கு மேல நெருங்கி வந்து கடந்து சென்றது. இந்த கோளால் பூமிக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

1998ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29ம் திகதி நாசாவால் கண்டுபிடிக்கப்பட்ட 1998 OR2 என அழைக்கப்படும் ஒரு சிறியகோள், சுமார் 3.9 மில்லியன் மைல் தொலைவில், மணிக்கு 19000 கிலோமீட்டர் வேகத்தில் இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணி அளவில் பூமிக்கு மேல் கடந்து சென்றது.

இந்த கோளால் பூமிக்கு எந்த ஆபத்தும் தற்போதைக்கு இல்லை என்றும் ஏனெனில் பூமிக்கும் அந்த சிறிய கோளுக்கும் இடையே பல்லாயிரம் கிலோமீட்டர் தூரம் இருப்பதால் பயப்பட தேவையில்லை எனறு நாசா தெரிவித்தது.

அத்துடன் பூமியில் இருந்து சந்திரனுக்கு இடையே உள்ள தூரத்தை 16 மடங்கு அதிகம் என்றும் நாசா தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், நாசா தனது ட்விட்டர் பக்கத்தில் சில தகவல்களை நேற்று இரவு பகிர்ந்தது. அதில் சில முக்கிய விஷயங்களை கூறியுள்ளது.

இந்த சிறுகோள் தவிர, ஒரு சிறிய சிறுகோள் பூமியை நோக்கி வருகின்றது. தற்போது கிரகத்திலிருந்து சுமார் 23,000 மைல் தொலைவில் (அதாவது 36,400 கி.மீ) உள்ளது அந்த சிறுகோள். அதற்கு 2020 ஹெச்எஸ் 7 என பெயரிடப்பட்டுள்ளது என்று தெரிவித்தது.

இதுபோன்ற சிறிய கோள்கள் ஒவ்வொரு மாதமும் பூமியைக் கடந்து சில நேரங்களில் மோதுகின்றன, ஆனால் அவை மோதியதும் அழிந்துவிடும் என்று நாசா கூறியுள்ளது,

இது ஒரு புவியியல் நடவடிக்கை என்று நாசா தெரிவித்துள்ளது.

1.2 மைல் அகலமுள்ள அந்த விண்வெளிப் பாறை என்று அழைக்கப்படும் இந்த சிறிய கோளின் வருகையை புவேர்ட்டோ ரிக்கோவில் உள்ள அரேசிபோ ஆய்வகம் கண்காணித்து வருகிறது.

இந்நிலையில் இந்த சிறுகோள் ஒரு PHO (அபாயகரமான பொருள்) என வகைப்படுத்தப்பட்டுள்ளது, ஏனெனில் இது 140 மீட்டருக்கும் பெரியது மற்றும் பூமியின் சுற்றுப்பாதையில் இருந்து ஐந்து மில்லியன் மைல்களுக்குள் வரும்.

ஆனால் கோளிடம் இருந்து எதுவும் கிரகத்திற்கு உடனடி ஆபத்தை ஏற்படுத்தாது. எனினும் 2020ம் ஆண்டுக்கு பிறகு அது எவ்வாறு நகரும் என்பதைப் பார்க்க விஞ்ஞானிகள் தொடர்ந்து சிறுகோள் மீது ஒரு கண் வைத்திருக்கிறார்கள்.

0 Reviews

Most Popular

கொரோனா பாதிப்பு அதிகம் இல்லாத பாதுகாப்பான 14 நாடுகளை வெளியிட்டுள்ள ஐரோப்பிய யூனியன்!

கொரோனா பாதிப்பு அதிகம் இல்லாத பாதுகாப்பான 14 நாடுகளை சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளிப்பதாக,ஐரோப்பிய யூனியன் அறிவித்துள்ளது. சீனாவில் முதன் முதலில் தென்பட்டதாக கூறப்படும் இந்த கொரோனா வைரஸ், அதன் பின் மார்ச்...

30 லட்சம் பாஸ்போர்ட் வழங்க பிரித்தானியா முடிவு!

ஹாங்காங்கை சேர்ந்தவர்களுக்கு 30 லட்சம் பாஸ்போர்ட் வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும்,இது தொடர்பான அறிவிப்பை வெளியுறவு அமைச்சர் டாமினிக் ராப் வெளியிடுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஹாங்காங் மீதான தன் கட்டுப்பாடுகளை தீவிரமாக்கும் வகையில்,சீனா...

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் விதிக்கப்பட்ட தடை!

பிரான்ஸ் தலைநகரில் இம்மாதத்தில் சில நாட்களுக்கு பட்டாசுகள் விற்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக பிரான்சில் விதிக்கப்பட்டிருக்கும் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டு வருகிறது. இந்நிலையில் தலைநகர் பாரிசில்,இம்மாதத்தின் சில நாட்களுக்கு பட்டாசுகள் விற்பனைக்கு...

ஜூலை மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள்!

பொதுவாக மனிதராக பிறந்த அனைவருக்குமே நல்ல குணங்கள்,தீய குணங்கள் என்று இரண்டு குணங்கள் உண்டு. அந்தவகையில் தற்போது ஜூலை மாதத்தில் பிறந்தவர்களிடம் இருக்கும் நல்ல மற்றும் தீய குணங்கள் என்னென்ன என்று பார்க்கலாம். நிறைவான வாழ்வை...

Recent Comments