வானமும் வசப்படுமே!

0
தோல்விகளைக் கண்டு துவளாதே!
தோல்வியே வெற்றியின் படிக்கல்
தோல்வி என ஒன்று கிடையாதே!
துயர் உனக்கு வேண்டாமே!
வெற்றி வாழ்கையை மாற்றுதே
வெற்றியின் களிப்பில் நீ மாறாதே!
அளவால் வெற்றி வேறுபடலாம் ஆனால்
அடைந்த வெற்றி மாறாதே!
துணிவே துணை இதை மறவாதே
துணிந்தால் துக்கம் மறையுதே
அல்லல் நிரந்தரம் இல்லை – இதை
அறிந்தால் என்றும் வெற்றிதான்!
எட்டாக்கனி என்று எண்ணாதே
எதுவும் நம் பக்கம் கலங்காதே
முயன்றால் முடியாதது இல்லையே
முயன்றிடு முனைந்திடு!
காலம் அதன் கடைமைகள் தவறாதே
காத்திருத்தல் என்றும் வீண் ஆகாதே
கருத்தாய் நாளும் உழைத்தால்
அழகாய் நாட்களும் நகருமே!
கிடைக்கும் வாய்ப்பை விட்டு விடாதே
கிடைக்காததை எண்ணி வருந்தாதே
அண்ணார்ந்து பார்த்தால் வானம் தூரம் ஆனால்
அவரவர் மட்டத்தில் வானம் தொடும் தூரமே!!

0 Reviews