27.7 C
Jaffna
Sunday, August 9, 2020
Home Spiritual Astrology 2020 மே மாதம் பிறந்தவர்களுக்கான பலனும் பரிகாரங்களும்!

2020 மே மாதம் பிறந்தவர்களுக்கான பலனும் பரிகாரங்களும்!

2020 இல் மே மாத எண் ஜோதிடப்பலன்களை தற்போது இங்கு பார்ப்போம்.

1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு

அனைவரையும் அனைத்து இடத்திலும் அனைத்து வேளைகளிலும் அனுசரித்து போகும் ஒன்றாம் எண் அன்பர்களே, எடுத்த காரியம் கைகூடும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். மதிப்பும் மரியாதையும் சிறப்பாக இருக்கும்.

உங்கள் மீதான அவப்பெயர் மறைந்து செல்வாக்கு மேம்படும். உங்கள் சொல்லுக்குப் பிறர் மரியாதை கொடுப்பர். வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

குடும்ப பிரச்சனை கட்டுக்குள் அடங்கி இருக்கும். உத்தியோகம் பார்ப்பவர்கள் நல்ல வளர்ச்சியைக் காணலாம்.

உங்கள் முன்னேற்றத்திற்கு தடையாக இருந்தவர்கள் தவறை உணர்ந்து உங்களிடம் வந்து சரணடைவார்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த பதவி உயர்வு கிடைக்கும். சிலர் அதிகார அந்தஸ்திற்கு உயர்த்தப்படுவீர்கள்.

சம்பள உயர்வு எதிர்பார்த்திருந்ததை விட அதிகமாக கிடைக்கும். உங்கள் ஆற்றல் மேம்படும். விரும்பிய இடமாற்றம் கிடைக்கும்.

வேலையின்றி இருப்பவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்புகள் வந்து சேரும். தொழில் புரிவோருக்கு இருந்து வந்த மந்த நிலை மறையும். அலைச்சலும் வேலைப் பளுவும் ஓரளவு இருக்கத்தான் செய்யும். அதே வேளையில் நீங்கள் சென்ற இடமெல்லாம் அனுகூலம் ஏற்படும். சேமிப்புகள் அதிகரிக்கும். நல்ல வருமானத்தைக் காண்பர்.

படிப்படியாக லாபம் அதிகரித்துக் கொண்டே இருக்கும். புதிய தொழில் தொடங்குவற்குண்டான வேலைகளுக்கு அரசாங்க அனுகூலம் கிடைக்கும்.

பரிகாரம்: வியாழக்கிழமைதோறும் தக்ஷிணாமுர்த்திக்கு நெய் விளக்கு ஏற்றி வலம் வரவும்.

2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு

அனைவரிடமும் பாசமாக இருக்கும் இரண்டாம் எண் அன்பர்களே, தேவையான இடங்களில் நீங்கள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. தேவைகள் ஒவ்வொன்றாகப் பூர்த்தியாகும். நீண்ட நாட்களாக வாங்க நினைத்த பொருளை வாங்கலாம்.

நண்பர்கள் இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். அவர்களால் உதவிகள் பெறலாம். சுபநிகழ்ச்சிகளுக்கு இப்போது திட்டமிடலாம். வெகுநாட்களாக தடைப்பட்டு வந்த திருமணத்திற்கு உண்டான முயற்சிகளை இப்போது தொடங்கலாம்.

புதிய வீடு கட்டுவதற்கான வேலைகளையும் இப்போது தொடங்கலாம். வசதியான வீட்டிற்கு குடி புகவும் வாய்ப்புண்டு. புதிய ஆபரணங்கள் வாங்கலாம். விருந்து விழா என உல்லாசமாக பயணம் மேற்கொள்வீர்கள். சந்தாணபாக்கியம் ஏற்படும்.

பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். அக்கம்பக்கத்தினருடன் இருந்து வந்த மனவருத்தம் நீங்கும். சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். பணவரவு திருப்தி தரும். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் வந்து சேரும்.

ஏற்கனவே இருந்து வந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். நெடுநாளாக வராமல் இருந்த பணம் வரும்.

மாணவர்கள் கல்வியில் சிறப்பான முன்னேற்றத்தை அடையலாம். கடந்த சில மாதங்களாக இருந்து வந்த மந்தநிலை அடியோடு மாறும். சிலருக்கு வெளிநாடு சென்று படிப்பதற்குண்டான காரியங்களை இப்போது தொடங்கலாம்.

பரிகாரம்: சனிக்கிழமைதோறும் பெருமாள் கோவிலுக்கு சென்று 3 முறை வலம் வரவும்.

3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு

அனைவரின் அன்பையும் தன்வசமாக்கும் மூன்றாம் எண் அன்பர்களே, பொருளாதார வளம் சீராக இருக்கும். அதே வேளையில் செலவும் அதிகரிக்கலாம். சிக்கனம் தேவை. குடும்பத்தில் சந்தோஷம் நிலவும்.

மனைவி வழியில் சிற்சில கருத்துவேறுபாடுகள் வரலாம். ஆனாலும் அது நொடிப் பொழுதில் சரியாகி விடும். ஆனால் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடு வரலாம். அவர்கள் வகையில் சற்று ஒதுங்கி இருங்கள்.

மனதில் நிம்மதியும் ஆனந்தமும் ஏற்படும். பிள்ளைகளால் பெருமை காணலாம். அக்கம்பக்கத்தாரிடம் இருந்து வந்த கசப்புணர்ச்சி நீங்கும்.

திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் தங்கு தடையின்றி நடைபெறும். சந்தாண பாக்கியம் கிடைப்பதற்கு யோகமான காலகட்டம் இது. புதிய வீடு மனை வாங்க தடைகள் ஏற்படலாம்.

உத்தியோகஸ்தர்களுக்கு அதிக வேலைபளுவை சுமந்தாலும் அனைத்தையும் சுலபமாக செய்வீர்கள். அலைச்சல்கள் வரலாம். சிலருக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கும்.

கோரிக்கைகள் நிறைவேறும். சக ஊழியர்கள் உதவிகள் செய்து அனுசரனையாக இருப்பார்கள். உங்களிடம் கொடுக்கப்பட்டுள்ள பொறுப்புகளை நீங்கள் திறமையாகச் செய்வீர்கள்.

பரிகாரம்: தினமும் சனி ஹோரை அல்லது சுக்கிர ஹோரையில் சிவன் கோவிலில் வலம் வரவும்.

4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு

ஆன்மீகத்தில் அதிக நாட்டம் கொண்ட நான்காம் எண் அன்பர்களே, உங்களுடைய வியாபாரம் சீராக நடக்கும். அதிக உழைப்பை செய்தவர்களுக்கு ஏற்ற பொருளாதார வளம் வந்து சேரும். புதிய தொழில் ஆரம்பித்தவர்களுக்கு பொன்னான காலகட்டமிது.

மூதலீடுகளை திருப்பி எடுப்பதோடு மட்டுமல்லாமல் லாபத்தையும் அள்ளுவீர்கள். வாடிக்கையாளர்கள் அதிகமாக வருவார்கள்.

கூட்டு வியாபாரம் செய்பவர்களுக்குள் இருந்து வந்த சுணக்க நிலை மாறும். வரவு செலவு கணக்கில் இருந்து வந்த சந்தேகங்கள் நீங்கும். மறைமுகமாக உங்களை குறை சொல்லியவர்கள் தங்கள் தவறை உணர்வார்கள்.

காரிய அனுகூலத்தால் மனமகிழ்ச்சி ஏற்படும். கலைத்துறையினருக்கு மிகப் பொன்னான காலமிது. சிறிது முயற்சி எடுத்தாலும் வாய்ப்புகள் வந்து குவியும். புதிய ஒப்பந்தங்களை துணிந்து ஏற்றுக் கொள்ளலாம்.

எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்கும். மாணவமணிகள் சிறிது சிரத்தை எடுத்தாலே பெருவெற்றி பெறலாம். அனைத்திலும் நினைத்த மதிப்பெண்கள் கிடைக்கும். வழக்கு வியாஜ்ஜியங்களில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் காணப்படும். அனைவருக்கும் வேலைப்பளு அதிகரிக்கும்.

பரிகாரம்: வியாழக்கிழமைதோறும் அருகிலிருக்கும் ஏதேனும் ஒரு கோவிலுக்குச் சென்று வலம் வரவும்.

5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு

மற்றவர் நலனில் அதீத அக்கறை கொண்ட ஐந்தாம் எண் அன்பர்களே, நீங்கள் செய்து வரும் தொழிலில் சிறப்பான பலன்களைக் காணலாம்.

கடந்த காலத்தை விட கூடுதல் லாபம் கிடைத்தாலும் தொழிலை விரிவுபடுத்துவற்குண்டான வேலைகளை இப்போது ஆரம்பிக்கலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

தொழில் நிமித்தமாக சிலர் தூர தேச பயணம் மேற்கொள்ள வேண்டி வரலாம். இந்த வேளையில் யாரிடமும் சற்று கவனமுடன் பார்த்து பழக வேண்டியது அவசியமாகிறது.

வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு குறைந்த முதலீட்டில் தொழில் தொடங்க சரியான தருணமிது. வீண் செலவும், அலைச்சலும் உண்டாகலாம். எதிர்பாராத இடமாற்றம் ஏற்படலாம். தேவையற்ற குற்றச்சாட்டுக்கு ஆளாகலாம்.

எனவே எதிலும் மிகவும் கவனத்துடன் ஈடுபடுவது நல்லது. கலைஞர்களுக்கு தங்குதடையின்றி புதிய வாய்ப்புகளைப் பெறலாம். புகழ் பாராட்டு வந்து சேரும்.

நற்பெயர் எடுப்பத்ற்குண்டான சூழ்நிலைகள் உருவாகும். எதிர்பார்த்த பதவிகள் வந்து சேரும் மாணவர்கள் நல்ல நிலைக்கு உயர்த்தப்படுவீர். மேல்படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும்.

பரிகாரம்: சனிக்கிழமைதோறும் அருகிலிருக்கும் பெருமாள் கோவிலில் உள்ள கருடமூர்த்தியை வணங்கவும்.

6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு

எந்த பிரச்சனையிலும் அமைதியாகவும் அதே வேளையில் பெரியோர் அறிவுரைகளோடும் முடிவெடுக்கும் ஆறாம் எண் அன்பர்களே, நீண்ட நாட்களாக இருந்து வந்த குறைகள் ஒவ்வொன்றாக மாறும். ஒவ்வொரு நாளும் முன்னேற்றத்திற்குண்டான பாதைகளை வகுப்பீர்கள்.

அதே வேளையில் தெய்வ அனுகூலமும் உங்களுக்கு உண்டு. பொருளாதார வளம் சிறப்படையும். காரிய அனுகூலங்களும் உண்டு.

செய்யும் முயற்சிகளில் தடை வந்தாலும் அதனை முறியடிக்கும் வல்லமை உங்களுக்கு உண்டு என்பதை உணருங்கள். தம்பதிகளிடையே அன்பு அதிகரிக்கும்.

சுபநிகழ்ச்சிகள் உடனே நிறைவேறும். முயற்சிகளை தொடர்ந்து செய்வது நல்லது. உத்தியோகம் பார்ப்பவர்கள் தொடர்ந்து சற்று சிரத்தை எடுத்து உழைக்க வேண்டியதிருக்கும்.

உங்கள் உழைப்புக்குத் தகுந்த செல்வாக்கும் பணவரவும் கிடைக்கும். உடன்பணிபுரிவோரால் அனுசரனைகள் உண்டு.

உங்கள் பொறுப்புகளை தட்டிக் கழிக்க வேண்டாம். எந்த வேலையையும் நேரம் தவறாமல் செய்யவும். தள்ளிப் போடுதலும் கூடாது.

பரிகாரம்: வியாழக்கிழமைதோறும் சிவன் கோவிலை வலம் வாருங்கள். துளசிமாலையை பெருமாளுக்கு அர்ப்பணிக்கவும். எல்லாம் நல்லதே நடக்கும்.

7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு

அனைவரின் ஆலோசனையும் கேட்டாலும், தன் அறிவு கொண்டு தெளிவான முடிவெடுக்கும் ஏழம் எண் அன்பர்களே, தொழில் செய்பவர்கள் பின் தங்கிய நிலையில் இருந்து மீண்டு முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைப்பர். பணவரவு அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்குவத்ற்குண்டான ஆர்வம் பிறக்கும். குறைந்த முதலீட்டில் தொழில் தொடங்கலாம்.

அதேநேரம் சிலர் தொழில் நிமித்தமாக வெளியூர் அல்லது நீண்ட தூரம் பயணம் மேற்கொள்ள வேண்டி வரும்.

நீண்ட நாட்களாக இழுபறியில் உள்ள பிரச்சினை முடிவில் செல்வம், உரிமை, அதிகாரம் கிடைக்கப் பெறுவீர்கள். பணதேவை உண்டாகும். செயல்திறன் வெளிப்படும். புதிய முயற்சிகள் அலைச்சலை தரும். வியாபாரம் சீரான நிலையில் இருக்கும். அதிக சிரத்தை எடுத்தால்தான் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

ஆனால் பணப்புழக்கம் கடந்த காலத்தை விட அதிகம் இருக்கும். பாடுபட வேண்டியிருந்தாலும், பிற்பாதி மிகவும் நன்றாக இருக்கும். சின்ன கருத்து மோதல்கள் வரலாம். நீங்கள் சொன்ன வாக்கைக் காப்பாற்ற சிறிது போராட வேண்டி வரலாம்.

மேலும் வீண் அலைச்சலும் ஏற்படலாம். தேவையில்லாத பணவிரையம் ஆகலாம். காரிய அனுகூலம் கிடைக்கும். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். தனியார் வேலையில் இருப்பவர்களுக்கு சிறு வாக்குவாதங்கள் வரலாம். வரவுக்கேற்ற செலவுகளும் வந்து சேரும்.

பரிகாரம்: புதன்தோறும் பெருமாளுக்கு நல்லெண்ணெய் மற்றும் நெய் கலந்து விளக்கு ஏற்றவும். மரிக்கொழுந்தை அம்மனுக்குப் படைக்கவும்.

8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு

எதிர்காலத்தை சரியாக திட்டமிடும் 8ம் எண் அன்பர்களே, வருங்காலத்திற்குத் தேவையான முதலீடுகளை அதற்குண்டான நபர்களிடம் ஆலோசனைகள் செய்து முதலீடுகள் செய்வீர்கள்.

பிரச்சனைகளை முறியடிக்கும் வல்லமை உங்களை வந்து சேரும். காரிய அனுகூலம் கிட்டும். செல்வாக்கில் முன்னேற்றம் ஏற்படும்.

எந்த காரியத்திலும் எந்த சூழ்நிலையிலும் நீதியை நிலைநாட்டுவீர்கள். பிரச்சனைகளுக்கு மத்தியில் ஓரளவு நல்ல பலன்களையே கிடைக்கப் பெறுவீர்கள். பிள்ளைகளால் இருந்து வந்த தொந்தரவுகள் நீங்கி நல்லவைகள் நடக்க ஆரம்பிக்கும்.

இறையருளும் தெய்வ நம்பிக்கையும் கூடும். உங்கள் திறமையில் இருந்து வந்த பின்தங்கிய நிலை இனி மாறும். தைரியமாக பீடு நடை போட்டு உங்கள் வேலைகளை செய்வீர்கள்.

வெப்பம் சம்பந்தபட்ட உடல் உபாதைகள் ஏற்படலாம். கவனம் தேவை. தம்பதிகளிடையே ஒற்றுமை மேலோங்கும். எனினும் வாழ்க்கைத்துணை வழியில் உள்ள உறவினர்களுடன் கருத்து பரிமாற்றங்கள் செய்யும் போது மிகுந்த எச்சரிக்கை தேவை.

நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் சிறு சிறு தடைகள் வந்தாலும் உங்களுக்கு இருக்கும் சாதுர்யத்தால் அதையெல்லாம் முறியடித்து வெற்றிப் பாதையில் பயணீப்பீர்கள். தாய் வழி உறவினர்களுடன்

பரிகாரம்: திங்கள்தோறும் சிவனையும் அம்பாளையும் வணங்குங்கள். மல்லிகையை அம்மனுக்குப் படைக்கவும். மனம் போல் வாழ்க்கை இருக்கும்.

9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு

சீரிய வீரத்தாலும், தனியாற்றலாலும் அனைவரையும் தனது தலைமைப் பண்பால் ஈர்க்கும் ஒன்பதாம் எண் அன்பர்களே, உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும்.

பொருளாதார வளம் மேம்படும். தொழில் உன்னத நிலையை அடையும். குடும்பத்தில் முன்னேற்றமும் சுபநிகழ்ச்சிகளும் நடைபெறும். ஆனால் பணவிரையமும் காரியத்தாமதமும் ஏற்படலாம். எனினும் எந்த பிரச்சனையையும் முறியடிக்கும் வல்லமை உங்களுக்கு வந்து சேரும்.

வீட்டிற்குத் தேவையான பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்கும். பிள்ளைகள் வழியில் சிற்சில கசப்பூட்டும் சம்பவங்கள் நடந்தாலும் பல நல்ல அனுகூலம் ஏற்படும்.

அவர்களால் முன்னேற்றம் ஏற்படும். எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிக்கலாம். உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு இது சிறப்பான காலகட்டமாகும். நற்பெயர் கிடைக்கும். மேலதிகாரிகளின் அனுசரனை கிடைக்கும். அரசு சார்ந்த விஷயங்களில் பிரத்தியேகமான சலுகைகளை பெற முடியாமல் போகலாம்.

ஆனாலும் பதவி உயர்வும் சம்பள உயர்வும் தங்கு தடையின்றி கிடைக்கும். வியாபாரிகள் முன்னேற்றப் பாதையில் செல்ல முடியும். நல்ல லாபம் கிடைக்கும். புதிய தொழில் ஆரம்பிக்கக் கூடிய முயற்சிகள் ஆலோசனைகளில் ஈடுபடலாம். வரவு செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும்.

வாகனங்களைப் பிரயோகப்படுத்தும் போது கவனம் தேவை. நெருப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சற்று கவனமாக இருக்கவும்.

பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமைதோறும் அருகிலிருக்கும் சிவன் கோவிலில் உள்ள காலபைரவரை வணங்குங்கள். வில்வ இலையை சிவனுக்கு அர்ப்பணித்தால் அனைத்து காரியங்களும் தடையின்றி நடக்கும்.

0 Reviews

Most Popular

2021-ம் ஆண்டு 20 ஓவர் உலககோப்பை போட்டி எங்கு நடைபெறவுள்ளது தெரியுமா?

2021-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை போட்டியை இந்தியாவில் நடத்துவது என்று ஐ.சி.சி. கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் அக்டோபர்,நவம்பர்...

ஓய்வு தொடர்பில் டோனியின் அறிவிப்பு!

இந்திய அணியின் முன்னாள் அணித் தலைவர் டோனி தாம் எப்போது ஓய்வை அறிவிப்பேன் என்பதை சூசகமாக அப்போதெ தெரிவித்துள்ளார் என தெரியவந்துள்ளது. டோனி இந்தியாவுக்காக மீண்டும் கிரிக்கெட் விளையாடுவாரா அல்லது ஒய்வு பெறும் முடிவை...

பாடசாலைகள் ஆரம்பிப்பது தொடர்பில் கல்வியமைச்சு வெளியிட்டுள்ள செய்தி!

நாளை முதல் மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளை கட்டம் கட்டமாக ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி நாளை முதல் பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு விசேட முறைமைகள் கையாளப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். ஒரு மீற்றர் இடைவெளியை பேணி...

புதிய பிரதமராக மகிந்த ராஜபக்‌ஷ இன்று பதவியேற்பு!

புதிய அரசாங்கத்தின் பிரதமராக மகிந்த ராஜபக்‌ஷ இன்று பதவியேற்கவுள்ளார். களனி ரஜமகாவிகாரையில் இன்று காலை 8.30க்கு அவர் பதவியேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரான மகிந்த ராஜபக்‌ஷ 4வது தடவையாக பிரதமராக பதவியேற்கவுள்ளார். நடைபெற்று...

Recent Comments